முகப்பு
நூல் அரங்கம்

கலைஞர் 100 கவிதைகள் 100

கருணாநிதியை நேசிப்பவர்களுக்கு ஓர் ஆவணம் இந்த நூல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

கலைஞர் 100 கவிதைகள் 100 - தொகுப்பு கவிஞர் வைரமுத்து; பக்.246; ரூ.500; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; ✆87545 07070.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி வெளியாகி இருக்கிறது இந்தக் கவிதை தொகுப்பு நூல்.

தமிழகத்தை நீண்டகாலம் ஆட்சி செய்த கருணாநிதிக்கு கவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், திரைப்பட வசனகர்த்தா எனப் பலமுகங்கள். தனியே ஒரு நூலகமே வைக்கும் அளவுக்கு எழுதிக் குவித்தவர். அத்தகைய சிறப்பு பெற்ற கருணாநிதி குறித்து 100 கவிஞர்கள் எழுதிய 100 கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தொடங்கி சமகால கவிஞர்கள் வரை எழுதியுள்ள இந்தக் கவிதைகள் கருணாநிதியின் பன்முக ஆற்றலைப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன. இலவச கல்வி, பெண்களுக்கு சொத்துரிமை, மொழிப்போர், சமூகநீதி, பகுத்தறிவு என கருணாநிதியின் சாதனைகளை மீள்பார்வை பார்க்க ஒவ்வொரு கவிதையும் துணை செய்கிறது.

'நீ வாழ்ந்தது மட்டும் நீண்ட நாள் அல்ல உன் வரலாறும் நீண்டது', 'ஒரு நூற்றாண்டின் தலைப்புச் செய்தி', 'பெரியார் விதை அண்ணா மரம் தமிழின் மணம் பரப்பும் நீதான் அதன் வரம்' என ஒவ்வொரு கவிதையிலும் மேற்கோள் காட்ட ஏதாவது சில வரிகள்.

கருணாநிதியின் புகழ்பாடும் கவிதைகளாக இருந்தாலும், கவிதைகளின் பாடுபொருளாவை மாறிக்கொண்டே வரும் மொழி, இலக்கிய வடிவங்கள், மாறுபட்ட உத்திகள் போன்றவற்றை அறிந்துகொள்ள உதவுகிறது. கருணாநிதியை நேசிப்பவர்களுக்கு ஓர் ஆவணம் இந்த நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →