பயணம்
பயணக் கட்டுரைகள் என்றபோதிலும் நூலாசிரியரின் நடை நம்மை வியக்க வைக்கிறது.
பயணம் - பாதங்கள் பதித்த பாதைகள்- தீபா நாகராணி; பக்.116; ரூ.180; ஹெர் ஸ்டோரிஸ், 81, நான்காவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை-600 083.
'பயணம் என்பதில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் பக்கத்து ஊரும் அடங்கும்' என்று பயணத்துக்கு இலக்கணம் சொல்லும் நூலாசிரியர், கோயில்களைப் பிரதானமாகக் கொண்டே நமது முன்னோர்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்கிறார். பழனிக்கு பாதயாத்திரை செல்வது, திருப்பதி, வடநாட்டில் பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத் கோயில்களுக்குச் சென்று வருவது ஆகியவற்றை அதற்கு உதாரணமாகச் சொல்கிறார்.
இன்றைய இயந்திரமய வாழ்க்கையை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு ஒரே வழி பயணம் செய்வதே என்கிறார்.
அவர் பயணம் மேற்கொண்ட அரிட்டாபட்டி, விருதுநகர், மதுரையிலிருந்து சென்னைக்குச் சென்றது, விசாகபட்டினத்தில் உள்ள முக்கிய இடங்களுக்குச் சென்றது, சிக்கிம், டார்ஜிலிங், பாக்தோரா, சிம்லா, மங்களூர், குருவாயூர், கோவளம், சிங்கப்பூர் உள்ளிட்ட பல இடங்களைப் பற்றிய விரிவான, சுவையான பதிவாக இந்நூல் அமைந்திருக்கிறது.
பார்த்த இடங்களைப் பற்றிய பரவசமான பார்வையாக மட்டும் இல்லாமல், நூலாசிரியரின் சமூகப் பார்வையும், அக்கறையும் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ''நாம் நம் வைகைக்காக என்ன செய்தோம்? குறைந்தபட்சம் கழிவுகளைக் கூட கலக்கவிடாமல் செய்யக் கூட இயலவில்லை'' என்கிற அவரின் வருத்தம் அதற்கு ஒரு சான்று.
பயணக் கட்டுரைகள் என்றபோதிலும் நூலாசிரியரின் நடை நம்மை வியக்க வைக்கிறது. 'போகும் வழியெல்லாம் பேசிக் கொண்டே வரும் சுத்தமான காற்று' என்கிறார்.
சிம்லாவில் எச்சில் துப்பினால் ஐந்நூறு ரூபாய், குப்பை போட்டால் ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவது என்பன போன்ற பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.