கனவுகள் மின்னும் தேசம்
சமகால அமெரிக்காவைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் நூல்.
கனவுகள் மின்னும் தேசம் - பத்மா அர்விந்த்; பக்.218; ரூ.300; ஹெர் ஸ்டோரிஸ் , சென்னை-83; 96003 98660.
அமெரிக்கா என்றாலே அது பற்றிய சில கருத்துகள் நீண்டகாலமாக நம் மனதில் பதிந்து போயிருக்கிறது. ஆண்-பெண் உறவு மோசமாக இருக்கும்; குடும்பம் என்பதே சரியாக இருக்காது; விவாகரத்து அதிகமாக நடைபெறும்; குழந்தைகளைச் சரியாகக் கவனிக்க மாட்டார்கள் என்பன போன்ற அமெரிக்காவைப் பற்றிய கருத்துகள் நம்மிடம் பதிந்து போயிருக்கின்றன.
அமெரிக்க மத்திய, மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத்துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வரும் நூலாசிரியர், பல ஆண்டுகளாக அமெரிக்காவைப் பற்றி இருந்து வந்த கற்பிதங்களை இந்நூலில் நூலாசிரியர் உடைத்தெறிந்துள்ளார்.
தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் சமூகமாக அமெரிக்கா இருப்பது, பல சான்றுகளின் அடிப்படையில் விளக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் கைப்பேசியில் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதற்கு கட்டுப்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இந்திய தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கியிருக்கிறார்கள். அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவர்கள் பார்ப்பதில்லை.
ஆன்லைனில் பொருள்களை வாங்குவதில் அங்குள்ள நடைமுறைகள், அமெரிக்கர்கள் முதியவர்களை மரியாதையோடு நடத்தும்விதம், உணவுக்கட்டுப்பாட்டில் உள்ள பிரச்னைகள், கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள் என அமெரிக்காவின் இன்றைய நிலைமைகளை இந்நூல் விளக்குகிறது. சமகால அமெரிக்காவைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் நூல்.