முகப்பு
நூல் அரங்கம்

உன்னை அறிந்தால்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

உன்னை அறிந்தால் - யாமினி. ஆர்; பக்.102; ரூ. 150, ஹெர் ஸ்டோரிஸ், எண் 15, மகாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், ராக்கியப்பா தெரு, சென்னை-4.

ஒரு நபரின் தொடர்பு கொள்ளும் பாணி, பேச்சு, நடை, உடை பாவனை போன்ற வெளிப்புற அம்சங்களில் பயிற்சியளித்து கார்ப்பரேட் வணிகக் கலாசாரத்தில் சிறப்பானவர்களாகச் செயல்படவைக்கும் மென்திறன்களை பலரும் வாழ்க்கைத் திறன்கள் என சொல்லிக் கொள்வதுண்டு. இதேபோன்று அன்றாட வாழ்வாதாரத்துக்கான நடைமுறைத் திறன்களையும் வாழ்க்கைத் திறன்கள் என்போரும் உண்டு. ஆனால், வாழ்க்கைத் திறன்கள் என்பது நம்மை நாமே உள்நோக்கிப் பார்ப்பதற்கான பயணம் என்று கூறும் நூலாசிரியர், இதற்கான

உள்நோக்கிய பயணத்தை நமக்கு அறிமுகம் செய்துள்ளார். நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வை எவ்வாறு ஒவ்வொரு நொடியும் ரசித்து நேர்மறைச் சிந்தனைகளோடு மகிழ்வாக வாழ்வது குறித்து ஒவ்வொரு கட்டுரைகளிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

'நெருக்கமான உறவோ, நட்போ ஒரு எல்லைக் கோட்டை வகுத்திருப்பது அந்த உறவுக்கு இனிமையைக் கூட்டும்', 'லட்சியங்கள் இல்லாத வாழ்க்கையில் எவ்வித செழிப்புகளும் நிகழ்வுகளும் இருப்பதில்லை', 'தன் மீது தன்னம்பிக்கையும் மதிப்பும் உள்ள ஒருவர் உலகத்தைக் கவர்கிறார்', 'நம்மை நாமே நேசிக்கும்போது தீங்கானதைச் செய்வோமா என்ன'? என சிந்தனைத் துளிகள் நூலெங்கும் காணப்படுகின்றன.

பிரச்னைகளை சவாலாகப் பார்ப்பதன் மூலமே பாதி தீர்த்து விடலாம் என்றும், சவாலுக்கு தீர்வு காண்பதற்கான ஏழு படிமுறைகளைச் செயல்படுத்துவது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு மனிதரையும் முக்கியமான நம்மை நாமே நேசிக்கும் தன்மையும் நமக்குக் கைகூடும் என்கிறார் நூலாசிரியர். தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் நல்லதொரு நூல் இது.

முழு கட்டுரையைப் படிக்க →