செம்மொழித் தமிழும்... திரை இசை மொழியும்
செம்மொழித் தமிழும்... திரை இசை மொழியும்: சுந்தர ஆவுடையப்பன்; பக்.432; ரூ.400; குமரன் பதிப்பகம், சென்னை-17; ✆9444013999.
அகில இந்திய வானொலியில் 29 ஆண்டுகள் பணிபுரிந்த நூலாசிரியர் தமிழ் இலக்கியத்துக்கும் திரை இசைப் பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமையை இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கவிதையாக சங்க இலக்கியம் விளங்கியது. இன்றைய படித்தவர் - பாமரர் என அனைவரின் கவிதையுமாக திரையிசைப் பாடல்கள் விளங்குகின்றன. இந்த இரு கவிதைப் போக்கையும் ஒப்புமைப்படுத்தி, நயங்காட்டி, தமிழின் செழுமையை காட்டும் முயற்சியில் நூலாசிரியர் இறங்கியுள்ளார். காதல், குடும்பம், கடவுள், நட்பு உள்ளிட்ட 129 தலைப்புகளில் இந்நூல் வெளிவந்துள்ளது.
உயிர்கள் தோன்றிய காலம் முதல் அதனுடன் இணைந்த உணர்வுகள் தொன்றுதொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய கலாசாரம் நவீனத்துவம் அடைந்துவிட்டதாகக் கருதினாலும், இவரது ஒப்புமை மூலம் தமிழரின் கலாசாரம் இன்றுவரை சங்க இலக்கியத்துடன் தொடர்புடையதாக உள்ளதை உணர முடிகிறது.
உதாரணத்துக்கு நற்றிணையின் நெய்தல் திணையில் வரும் 172-ஆவது பாடல் சுற்றுச்சூழல் மூலம் காதலரின் சந்திப்பை சங்கத் தமிழர் பதிவு செய்திருப்பர். இதே முறையில் "கிழக்குச் சீமையிலே' படத்தில் வரும் "ஆத்தங்கரை மரமே...' பாடல் காதலர்கள் சந்திப்பை பிரதிபலித்திருக்கும். இதுபோன்று ஒவ்வொரு அத்தியாயமும் சங்க இலக்கியத்துக்கும் திரையிசைப் பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. இசை, திரைத்துறைகளில் ஆர்வம் உள்ளோருக்கு இந்நூல் வரப்பிரசாதம்.