மின்னுவதெல்லாம் வைரமல்ல!
மின்னுவதெல்லாம் வைரமல்ல! (சமூக, பொருளாதார கட்டுரைகளின் தொகுப்பு)- எஸ்.ராமன்; பக்.166; ரூ.190; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட்., பெங்களூரு- 560 076; ✆74185 55884.
அவ்வப்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் உள்நாட்டு, சர்வதேச பொருளாதார நிகழ்வுகளை பாமர மக்களும் எளிதாக அறியும் வகையில் கட்டுரைகளை எழுதிவரும் நூலாசிரியர், 'தினமணி'யில் வெளியானவற்றில் 26 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார்.
சேமிப்பு, முதலீடு, வங்கிக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள், காசோலை, சிறுதொழில், திருமணங்களால் தனிமனித பொருளாதார வளர்ச்சி, லஞ்ச பொருளாதாரம், தங்கம், மோசடியாளர்களால் வங்கிகளுக்கு ஏற்பட்ட பாடம்,
கனவுகளை நனவாக்கத் தேவைப்படும் நிதி ஆதாரம், முதுமையில் வளமாக வாழ வழிமுறைகள், தேர்தலால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கம், வாராக் கடன், வட்டி விகிதங்கள் போன்றவற்றை இந்தக் கட்டுரைகளின் வாயிலாக, நிதி தொடர்புடைய சகல விஷயங்களையும் அறிய உதவும் அற்புதமான நூல் இது.
வங்கித் துறையில் உயர்அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எழுதிய நூல் என்றாலும், எளிய தமிழில் எழுதப்பட்டுள்ளது சிறப்பு.
வாழ்க்கையில் உயர்வடையத் துடிப்போர், முதலீட்டை நல்ல முறையில் செயல்படுத்தி எதிர்காலத்தைச் சிறப்பானதாக்கிக் கொள்ள முயல்வோர், வங்கிப் பணியில் உள்ளோர், பொருளாதாரத்தில் தொடர்புடையோர் என்று பலதரப்பட்டோருக்கும் பயன் அளிக்கும் வகையில் இந்த நூல் உள்ளது என்பதே நிதர்சனம்.
நாடு முன்னேற பொருளாதார வளர்ச்சியும் அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்த நூல், ஆட்சியாளர்கள், தொழில் துறையினர், அரசுத் துறையினருக்கும்கூட பயனளிக்கும்.