நூல் அரங்கம்

கோவையில் கன மழை: சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு!

கோவையில் கன மழை பெய்துவரும் நிலையில், சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

DIN

கோவையில் கன மழை பெய்துவரும் நிலையில், சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது..

பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் கோவை மாநகரப் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 8 அடிக்கு குறைவாக சென்றது. இதனால் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 3 கோடி லிட்டராக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

இந்நிலையில் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டில் முன் கூட்டியே தொடங்கியது. இதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. எனவே அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது.

நேற்று சிறுவாணி அணை பகுதியில் 135 மில்லி மீட்டர் மழையும், மலை அடிவாரப் பகுதிகளில் 95 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. நேற்று 31.45 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம். இன்று காலை நிலவரப்படி 35.35 அடியாக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கார் வெடிப்பு: அமீரைத் தொடர்ந்து 2 வது நபர் கைது!

SIR பணிகளை புறக்கணித்தால் சம்பளம் கிடையாது! | செய்திகள்: சில வரிகளில் | 17.11.25

பயங்கரவாத தாக்குதலுக்கான தண்டனையால் உலகுக்கே செய்தி அனுப்பப்படும்: அமித் ஷா

ஐஆர்பி இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் பங்குகள் 4% உயர்வு!

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகன்!

SCROLL FOR NEXT