முகப்பு
நூல் அரங்கம்

சிலம்பின் தேறல்

சிலப்பதிகாரத்தை பல்வேறு வகைகளில் ஆய்வு செய்து மேலும் அழகுபடுத்தியுள்ளார் நூலாசிரியர்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

சிலம்பின் தேறல் (ஆய்வு) - ப. முத்துமணி; பக். 176; ரூ. 250; வையைப் பதிப்பகம், தேனி-625534; ✆9842370792.

சிலப்பதிகாரத்தை பல்வேறு வகைகளில் ஆய்வு செய்து மேலும் அழகுபடுத்தியுள்ளார் நூலாசிரியர்.

'சிலம்பின் கொற்றவை' என்ற கட்டுரையில் கொற்றவைதான் பிற்காலத்தில் காளி, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவதை விளக்கி, அதை நிறுவியுள்ள விதம் வியக்க வைக்கிறது.

மன்னர்களால் சிறப்பிக்கப்பட்ட இந்திர விழா, பின்னர் ஏன் விலக்கிவைக்கப்பட்டது என்ற புதிய கோணத்திலான 'சிலம்பின் இந்திரவிழா' கட்டுரை சிந்தனையைத் தூண்டுகிறது.

பொங்கல் திருநாள் வழியாக, பசு, காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதும், ஏறு தழுவுதலில் வீரம்-காதல் ஆகிய இரண்டும் உள்ளதும் நமது பெருமைமிகு பண்பாடு என்பதை விளக்குகிறது 'சிலம்பின் ஏறு தழுவுதல்' கட்டுரை.

'தனக்காக வாழ்வது இன்பம் தரலாம் என்றாலும் பிறருக்காக வாழ்வதே அறம், பேரின்பம். அதுவே மனிதர்க்கு அழிவில்லாத ஆபரணம்' என்பதை 'சிலம்பின் அணிகலன் அறம்' கட்டுரையும், வடநாட்டு மன்னர்களின் தலைகளின் மீது கற்களைச் சுமந்துவரச் செய்த தமிழ் மன்னர்களின் வீரம் ஈடில்லாதது என்பதை 'சிலம்பின் கல் கொண்டான்' கட்டுரையும் எடுத்துரைக்கின்றன. சிலம்பின் ஊழ் மீட்டிய யாழ், சிலம்பின் ஐவகை நிலங்கள், சிலம்பின் நாவலன் (மாடலன்), சிலம்பின் மானுட உளவியல் உள்ளிட்ட 11 கட்டுரைகளும் நூலாசிரியர் ஆய்வுக் கடலில் மூழ்கி எடுத்த நல்முத்துகள். ஆய்வு செய்வோருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பேருவகை தரும் நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →