திணைக் கொள்கை உருவாக்கமும் சடங்கியல் தொன்மவியல் மூலங்களும்
திணைக் கொள்கை உருவாக்கமும் சடங்கியல் தொன்மவியல் மூலங்களும் - அலெக்சாந்தர் எம். துபியான்ஸ்கி (தமிழில் - பு. கமலக்கண்ணன்); பக்.316; ரூ. 400; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 50; ✆ 044 - 26251968.
ரஷிய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலம் வழித் தமிழில் பெயர்க்கப்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியரான மறைந்த அலெக்சாந்தர் எம். துபியான்ஸ்கி, ரஷியாவில் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவித்தவர். தமிழ்நாட்டுக்கும் நன்கு அறிமுகமானவர்.
நூலில் தொன்மவியல் பின்னணி பற்றிய தொடக்க இயலில், 'அணங்கு' என்ற சொல்லை எடுத்துக் கொண்டு தமிழ்ப் பாடல்களின் வழி, ஏற்கெனவே எழுதப்பட்ட நூல்களின் வழி ஆய்வு செய்யும் ஆசிரியர், உள்ளுறையும் ஆற்றல், ஆவி அல்லது கண்டறிய முடியாத இறை என இரு பொருள்களாக உரைத்து விளக்குகிறார்.
தவிர, கன்னித்தன்மையின் பேராற்றலும் கொற்றவையும், முருகு, சூர் போன்ற பல்வேறு சொற்களின் பின்புலமும் விரிவாக அலசப்படுகிறது.
பண்டையத் தமிழ்க் கவிதை மரபும் அதைத் தோற்றுவித்தவர்களும் பற்றிய இயலில் விறலியர்கள், தமிழ்ப் பாணர்களின் பாடல்களும் பங்களிப்பும் விரிவாக ஆராயப்படுகின்றன.
அகச்சூழல்களும் கதைமாந்தர்களும் - சடங்கியல் புராணவியல் மூலங்கள், கவிதையியல் இலக்கணமும் நாட்டுப்புறவியலும் என்ற தலைப்புகளிலும் ஐவகை நிலங்களுக்குமான அடிக்கருத்துகள் தனித்தனியே ஆராயப்படுகின்றன. நிறைவில் துபியான்ஸ்கியின் தமிழ்க் காதல் பற்றி அவருடைய மகள் டாட்யானா துப்யான்ஸ்கயா எழுதிய சிறு கட்டுரையும் நூலுக்கு அணி சேர்க்கிறது.
ஆய்வு நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கோர் எடுத்துக்காட்டு. ஆங்கிலம் அறிந்தவர்களிடையே மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த இந்த நூலை முழுவதுமாகத் தமிழில் தந்திருப்பது சிறப்பு.