இந்திய மக்களாகிய நாம்
இந்திய மக்களாகிய நாம் - வாஞ்சிநாதன் சித்ரா; பக்.256; ரூ.300; கிழக்கு பதிப்பகம், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை- 14; ✆ 044-42009603
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதோடு மட்டுமல்லாது, உலகிலேயே மிக நீளமான அரசமைப்புச் சட்டத்தையும் கொண்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தின் பின்னணியை இந்த நூல் மிக நுணுக்கமாக விவரிக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்தபோது, ஆங்கிலேய அரசின் யூனியன் ஜாக் கொடியை இறக்க வேண்டாம் என்னும் மௌண்ட்பேட்டனின் கோரிக்கைக்கு ஜவாஹர்லால் நேரு சம்மதம் தெரிவித்ததன்பேரில் 1947, ஆகஸ்ட் 15-க்குப் பிறகும் சில நாள்கள் அக்கொடி பறந்து கொண்டிருந்தது. இதுபோன்ற பல அரிய தகவல்களை இந்த நூல் ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறது.
இஸ்லாமியர்களின் சார்பாக பேச ஜின்னாவுக்கு எந்த அருகதையும் இல்லை என்று 1928-இல் விமர்சிக்கப்பட்டார். ஆனால், அதே ஜின்னா 1940-இல் முஸ்லிம்களுக்கு தனி நாடாக பாகிஸ்தான் வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தது ஏன்? நேரு, காந்தி தீவிர அரசியலுக்கு நுழையும் முன்பே இந்திய துணைக் கண்டத்தில் மத ரீதியாக இரு நாடுகள் உருவாவதற்கு எவ்வாறு தூபம் போடப்பட்டிருந்தது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்நூல் விரிவான பதில்களை பகிர்ந்துள்ளது.
இந்திய அரசியல் வரலாறு, அரசமைப்புச் சட்டத்தின் வரலாறு, வங்கப் பிரிவினை, பசுப் பாதுகாப்பு இயக்கம், ஹிந்து தேசியம், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்தவற்றில் ஆர்வமுடையோர் வாசிக்க வேண்டிய நூல் இது.