நூல் அரங்கம்

பேஸிக் அக்குபஞ்சர்

DIN

பேஸிக் அக்குபஞ்சர் - மருந்து இல்லா மருத்துவம்; டாக்டர் ச.சிவகாமி நடராஜன்; பக். 634; ரூ.1,500; அமுத நிலையம், சென்னை-14; ✆ 94442 99224.

மாற்று மருத்துவத்தில் பாரம்பரியமிக்க ஒன்றான அக்குபஞ்சர் சிகிச்சைகள் குறித்த அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய நூல் இது. சீனாவை தாயகமாகக் கொண்ட அக்குபஞ்சர் மருத்துவம், இந்தியாவில் போகரால் கண்டறியப்பட்டு, சீன நாட்டவரால் மேம்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருந்துகள் இல்லாத மருத்துவ நுட்பமான இந்த சிகிச்சை முறை எவ்வாறு செயல்படுகிறது, உடலின் எந்தெந்த இடத்தில் எந்தெந்த சக்தி புள்ளிகள் உள்ளன, அவற்றுக்கும் நோய்களை குணப்படுத்துவதற்குமான தொடர்புகள் என்ன என்பதை விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

அக்குபஞ்சர் மருத்துவம் பயில்வோருக்கும், ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும் ஒரு வழிகாட்டுதல் கையேடாக வெளியாகியிருக்கிறது இந்நூல். ஒவ்வொரு உறுப்புகளின் பணிகளை அக்குபஞ்சர் மருத்துவம் எவ்வாறு நுட்பமாக உணர்ந்து சிகிச்சை அளிக்கிறது என்பதை அறிவியல் தகவல்கள் மற்றும் தரவுகளுடன் எடுத்துரைத்திருக்கிறார் நூலாசிரியர்.

மொத்தம் 25 அலகுகளின் கீழ் உடலின் மொத்த கூறுகளையும், சீனத்து அக்குபஞ்சரால் அதில் ஏற்படும் பலன்களையும் எளிமையாக புரிய வைத்திருப்பது சிறப்பு. அதேபோன்று, ஒவ்வொரு உறுப்பும், பிற உறுப்புகளுடன் எத்தகைய தொடர்பில் உள்ளன என்பதை விவரித்திருக்கும் நூலாசிரியர், அதன் அக்கு புள்ளிகளைக் கையாளுவது தொடர்பாகவும் விளக்கிக் கூறியுள்ளார். இந்தியா, சீனா உள்பட உலகின் பல நாடுகளில் வேரூன்றியிருக்கும் அக்குபஞ்சர் மருத்துவத்தை முழுமையாக அறிந்து கொள்வதற்கான தொகுப்பேடு இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளா் கைது

அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கான இடங்கள் வரையறை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

அக்.2 காந்தி ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை

பாமக நிறுவனா் ராமதாஸுடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு

அரசுக் கல்லூரிக்கு பேருந்து இயக்கக் கோரி கையொப்ப இயக்கம்

SCROLL FOR NEXT