விகடன் தீபாவளி மலர்
மீண்டும் மீண்டும் படிக்க நிறைய விஷயங்கள் உள்ளன.
விகடன் தீபாவளி மலர் - 2024; தி.முருகன்; பக். 400; ரூ.180; சென்னை 02; ✆044- 66802907.
வேளாக்குறிச்சி ஆதினகர்த்தரின் அருளுரையுடன் மலர் தொடங்குகிறது. ஏஐ - தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அட்டை முகப்பை அலங்கரிக்கிறது, 'விகடன் பொக்கிஷம்' என்று 1970-ஆம் ஆண்டு தீபாவளி மலரிலிருந்து தி.ஜானகிராமனின் 'விளையாட்டுப் பொம்மை' கதையும், நகைச்சுவை எழுத்தாளர் நாடோடியின் 'வீட்டை விற்றுப் பார்' கதையும், ஓவியர்கள் கோபுலு, வாணி, மதன் வரைந்த ஸ்டிரிப் ஜோக்ஸ்களும் ரசிக்க வைக்கின்றன. எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் தொடங்கிய சமயத்தில் விகடனில் வெளியான படக்கட்டுரை மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது சிறப்பு.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற அகழாய்வில் 1300 ஆண்டு கால, தமிழகத்தின் முதல் செங்கற்கோயில் கட்டுரையும், அதேபோல ஆந்திரத்தின் குடிமல்லத்தில் 69 ஆண்டுக்கொருமுறை ஸ்வர்ணமுகி ஆற்று நீர், இங்குள்ள சிவலிங்கத்தைத் தொட்டு வணங்கிச் செல்வது குறித்த கட்டுரையும் சிறப்பு.
கல்கி -125 கட்டுரையும் இடம் பெற்றுள்ள கல்கி படத் தொகுப்பும் சிறந்த நினைவலைகள். எழுத்தாளர் வண்ணதாசன் வரைந்துள்ள கோட்டோவியங்கள் ருசியானவை. சரோஜாதேவி, ரோகிணி, ம.செ., டி.எம். கிருஷ்ணா நேர்காணல்களில் புதிய விஷயங்கள் உள்ளன. கவிதைகளுடன் மலர் சிறக்கிறது. மீண்டும் மீண்டும் படிக்க நிறைய விஷயங்கள் உள்ளன.