முகப்பு
நூல் அரங்கம்

உலகக் குடிமகன்

வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புபவர்கள், உலகை அறிய விரும்புபவர்கள், மாணவர்கள் என ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

உலகக் குடிமகன் - நா.கண்ணன்; பக். 200; ரூ.240; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044-42009603.

தமிழகத்தின் திருப்பூவணத்தில் பிறந்து பெரும்பாலான நாடுகளுக்கு பயணித்த நூலாசிரியரின் வாழ்க்கை வரலாறே இந்த நூல். சூழல் வேதியியல், சூழல் நச்சுவியல் ஆகிய துறைகளில்

உலகின் தலைசிறந்த முதல் பத்து பேராசிரியரும், நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று கொண்டாடப்படும் நூலாசிரியர், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர். அவர் வறுமையின் கோரப் பிடியை வெற்றிகரமாகச் சமாளித்து, ஒரு முனைவர் பட்டத்தை மதுரையிலும், மற்றொன்றை ஜப்பானிலும் பெற்றிருக்கிறார் என்கிற செய்தி கல்வி ஒரு மனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதைக் காட்டுகிறது.

பெரும்பாலான நாடுகளில் பணிபுரிந்திருக்கும் நூலாசிரியர், இந்தியாவைவிட பிற நாடுகள் கல்வி அறிவில், மனித வளத்தில் முன்னிலையில் இருக்கின்றன; இந்தியர்கள் சறுக்கும் இடங்கள்; சரிப்படுத்த வேண்டிய விஷயங்கள் என்பதையெல்லாம் நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார். பாலை நிலமான இஸ்ரேல் சொட்டு நீர் பாசனத்தை முன்னெடுத்து காய்கறி, பழங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தன்னிறைவு பெற்றுள்ளதை கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். தாய்மொழிப் பற்று, புதுக்கவிதையின் மீதான ஆர்வம், அறிவியலை தமிழ்வழி கற்றல், இணைய இதழ் உள்ளிட்டவற்றில் அவரது ஆர்வம் வியக்க வைக்கிறது.

ஒரு கிராமத்து மனிதன் உலகக் குடிமகனாக மாறியதை விவரிப்பதோடு மட்டுமல்லாது, இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியையும் விளக்குகிறது. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புபவர்கள், உலகை அறிய விரும்புபவர்கள், மாணவர்கள் என ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

முழு கட்டுரையைப் படிக்க →