முகப்பு
நூல் அரங்கம்

காலப் பிசாசுகள்

படிப்போரைக் கவரக் கூடிய நூல் இது.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

காலப் பிசாசுகள் (சிறுகதைகள்) - ம.இராசேந்திரன்; பக்.602; ரூ.750; யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை-42; ✆ 90424 61472.

தமிழ்ப் பல்கலை. துணை வேந்தராக இருந்த நூலாசிரியருக்கு அறிமுகம் தேவையில்லை. எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் என்று பல பரிமாணங்களைக் கொண்டு, கணையாழி ஆசிரியராக இன்றும் எழுதிக் கொண்டிருப்பவர்.

'எழுத்தும் ஒரு பிசாசுதான். எழுதி எழுதித்தான் விடுபடவும் பிடிபடவும் வேண்டி இருக்கிறது. இப்படிப் பிசாசுகளிடம் விடுபடவும் பிடிபடவும் கலை இலக்கியங்கள்தான் கைகொடுக்கின்றன. ஐம்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பதற்கு இந்த நூலே சாட்சி' என்று கூறுகிறார் நூலாசிரியர்.

தனக்கு அறிமுகமானவர்கள், அவர்களது வாழ்வில் சந்தித்த விஷயங்களையும், தனது வாழ்வில் சந்தித்தவர்களையும் சுவைபட 75 சிறுகதைகளாக்கியுள்ளார்.

எளிய தமிழில் பாமரரும் புரியும் வகையிலான எழுத்துகளை வாசிக்கும்போது, டெல்டாவாழ் பகுதியில் வாழ்ந்த அனுபவமே நேரிடும் வகையில் கதைகளின் ஊடே நூலாசிரியர் கடத்துகிறார்.

பூஜைகள், பண்டிகைகள், திருவிழாக்கள், சுப-துக்க நிகழ்வுகள், கடன் பிரச்னைகள், காதல், என்று பல்வேறு வகையான விஷயங்கள் குறித்து இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு

புரிதலை இந்த நூல் உண்டாக்கும். நூலை வாசித்து முடித்தவுடன் மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள், சவால்களை சமாளிக்கும் விதம் வியக்கவைத்து, அவருடைய பிற நூல்களை வாசிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது. படிப்போரைக் கவரக் கூடிய நூல் இது.

முழு கட்டுரையைப் படிக்க →