திருவாசகத்தில் மெய்யறிவு
தமிழ் ஆர்வலர்கள், ஆன்மிகவியலாளர்கள் வாசிக்க வேண்டிய நூல்.
திருவாசகத்தில் மெய்யறிவு - புலவர் கு.இரவீந்திரன்; பக்.360; ரூ.400; காவ்யா, சென்னை-24; ✆044- 2372 6882.
திருவாசகம் ஒரு தெய்வ வாசகம். படிப்பவர்களின் உள்ளத்தையும் உயிரையும் உருக்கும். திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்னும் பழமொழி யிலிருந்து இந்த மெய்ஞான நூலின் மகத்துவம் புரியும்.
மானிடப் பிறப்பின் பெரும் பயனை அடைந்து இன்புறுவதற்கென்றே மாணிக்கவாசகரால் பாடப் பெற்ற திருவாசகம், சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் எட்டாவதாக இடம்பெற்றுள்ளது. மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை திருவாசகப் பாடல்கள் துணைக் கொண்டு எளிமையாக விளக்குகிறார் நூலாசிரியர்.
'அற்புத மான வழுத தாரகை ளெற்புத் துளைதோறு மேற்றின னுகுகுலது'' எனும் பாடலுக்கு ' தன்னைச் சார்ந்து நிற்கும் உயிர்களை அன்பு செய்தல் என்றே நலஞ்செய்யும் அறமாகும்' எனப் பொருள் கூறி யாருக்கும் தீங்கு நினைக்காத உள்ளத்தை வலியுறுத்துகிறார்.
இவ்வாறு ஒவ்வொரு பாடல் வழியாக நூலாசிரியர் தெரிவிக்கும் கருத்துகள் அவரது அனுபவ அறிவை வெளிப்படுத்துகின்றன.
பதிகங்களின் வைப்புமுறை ஒன்றன்பின் ஒன்றாகப் பொருந்தி வந்துள்ள நிலை குறித்து நூலாசிரியர் விளக்கியிருப்பது சிறப்பு. சகல உயிர்களுக்கும் அன்பு செலுத்துவதையும், உதவி செய்வதையும் வலியுறுத்தும் கருத்துகள் வாழ்வில் பின்பற்றி தொடர வேண்டியவை. தமிழ் ஆர்வலர்கள், ஆன்மிகவியலாளர்கள் வாசிக்க வேண்டிய நூல்.