காளமேகம் பாடல்கள்
முழுவதுமாகப் படித்து முடிக்கும்போது நமக்கு மொழிச் செருக்கு ஏற்பட்டுவிடும் என்பது மட்டும் உறுதி.
காளமேகம் பாடல்கள் - புலியூர்க் கேசிகன்; பக்.176; ரூ. 220; சொர்ணவள்ளி பிரசுரம், சென்னை-33; ✆ 90948 75747.
காளமேகத்தின் இயற்பெயரிலிருந்து ஆரம்பித்து அவரது வாழ்க்கைப் பதிவுகளை நமக்கு ஓர் கதை போல் சுருக்கமாகத் தருகிறது இந்நூல். காளமேகத்தின் காதல், காதலால் அவர் செய்யும் புரட்சி, அதன் பின்பான அவரது கவிப்பயணம், சென்ற இடங்களில் அவர் பெற்ற அனுபவங்கள், அதனால் விளைந்த கவிகள் என நாமும் அவருடன் பயணித்தது போல் இருக்கிறது.
ஒரு செய்யுளில் பஞ்சம் ஏற்படுவதும், ஒரு வார்த்தையில் சினம் கொண்ட சிவனைத் தன்வயப்படுத்துதலும் தமிழால் மட்டுமே முடியும் என அந்தச் செய்யுள்களை நம்மை வாசிக்க வைத்து, அதற்கான விளக்கமும் இந்நூலில் தரப்பட்டிருக்கிறது.
காளமேகத்தின் மேதமையாக அறியப்படும் சிலேடைப் பாடல்களோ, வித்தாரச் செய்யுள்களோ ஆசிரியர் தேர்ந்தெடுத்து தெளிவுரை தந்திருக்கும் பாடல்களோ நமக்குக் கொஞ்சமும் சலிப்பைத் தராமல் மேலும் மேலும் வாசிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன.
மேலும் இந்நூலில் கடவுளைப் பற்றிய பாடல்களில் காளமேகம் அந்தக் கடவுள் மேல் கொள்ளும் உரிமை எத்தகையது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
தனிப்பாடல்களாக இந்நூலில் இடம்பெற்றுள்ள காளமேகத்தின் பாடல்கள் இன்னும் சுவாரஸ்யமானவை. இந்நூலினால் நமக்குப் புரிவது இது தான்: அது, தமிழ் என்னும் தெய்வமொழியால் தெய்வத்தை இகழ்வது போல்
புகழவும், செருக்குற்றோரை புகழ்வது போல் இகழவும் முடியும் என்பதுதான். முழுவதுமாகப் படித்து முடிக்கும்போது நமக்கு மொழிச் செருக்கு ஏற்பட்டுவிடும் என்பது மட்டும் உறுதி.