முகப்பு
நூல் அரங்கம்

திருநெல்வேலிப் பேட்டை

வரலாற்றை உறுதிப்படுத்தும் சான்றுகளால் நிறைந்திருக்கிறது இந்நூல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

திருநெல்வேலிப் பேட்டை- செ. திவான்; பக். 224; ரூ.250; ரெகான்-ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி ; ✆ 90803 30200.

திருநெல்வேலிப் பேட்டை என்கிற ஊரின் சிறப்புகளைப் பற்றி கூறுகிறது இந்நூல். பேட்டை என்றாலே குறிப்பாக வணிகம் நடக்கும் பகுதியாகவே இருக்கும் என்றும் பேட்டை என்று முடியும் பல ஊர்களை வரிசைப்படுத்தி சான்றுகளுடன் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

திருநெல்வேலிப் பேட்டைக்கு திருமங்கை நகர் என்பது ஆதிகாலத்துப் பெயர். இந்நூலில் இந்த ஊரைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தக்க சான்றுகளுடன் தரப்பட்டிருக்கின்றன.

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் இப்பகுதிக்கு, அவர்கள் எப்படி வந்தார்கள், அவர்கள் எவ்வாறு வணிகம் செய்யத் தொடங்கினார்கள், சமணத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தை ஏன் தழுவினார்கள் என்பன போன்ற பல தகவல்கள் நிரம்பிய ஒரு வரலாற்று ஆவணமாக இந்நூல் இருக்கிறது.

மேலும், இப்பகுதியிலுள்ள கோயில்கள், கல்விக்கூடங்கள், அதன் வரலாற்றுச் சிறப்புகள் என்று பதிவிடும் நூலாசிரியர், கூடுதலாக கண்ணியமிக்க காயிதே மில்லத் பிறந்த இந்த ஊரானது, மார்க்கத்துக்கு மட்டுமன்றி தமிழுக்கும் பல தொண்டுகளைச் செய்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார். குறிப்பாக புனித குரான் முதன்முதலாக தமிழாக்கம் செய்யப்பட்டது இங்குதான் என்கிறார்.

தமிழ் சித்த வைத்திய சங்கம் தொடங்கப்பட்டு, அந்த வைத்தியத்துக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவத்தை நிலைநாட்டிய வரலாறும் இந்த ஊருக்கு இருக்கிறதாக இந்நூல் தெரிவிக்கிறது. திருநெல்வேலிச்சீமை வித்திட்டது விடுதலைப்போராட்டத்துக்கு மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சிக்கும்தான் என்கிற வரலாற்றை உறுதிப்படுத்தும் சான்றுகளால் நிறைந்திருக்கிறது இந்நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →