முகப்பு
நூல் அரங்கம்

போத்து

அவசர மருத்துவ உதவிகளை நம் வாழ்வில் இலகுவாகக் கலந்து இருந்ததை சில சம்பவங்கள் வாயிலாக சொல்கிறது இந்த நாவல்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 5:52 PM
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 5:50 PM

போத்து-வானவன், பக்.264; ரூ.330; நாற்கரம், சென்னை-600 074, ✆ 95510 65500.

தாவரக் கழிவுகளையும், விலங்குகளின் கழிவுகளையும் நம்பி விளைந்த விளைச்சல்கள் மாறி, இன்று நவீன வேளாண்மை என்ற பெயரில் மண்ணும் மனிதனும் கெட்டு மருத்துவமனை உயர்ந்து நிற்கிறது எகிற தனது கோபத்தை வெளிப்படுத்தி, மீண்டும் மரபுவழி விவசாயத்துக்கு திரும்புவதன் அவசியத்தை இந்த நாவல் பேசுகிறது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 5:50 PM

பாம்பு என்றால் அது கொல்லப்பட வேண்டிய உயிர் என்பதுதான் மனிதனின் எண்ணம். பாம்பை அடிக்காமல் விட்டால் என்ன பயன் என்று கதையின் நாயகன் விளக்குவதும், உணவுச் சங்கிலி அறுபடக் கூடாது என்ற பார்வையும் கதைமாந்தர்கள் வழியாக உலகுக்கு உணர்த்தப்படுகிறது. எலிகள் துரத்தும் பூனையின் காட்சியை விவரிப்பது நகைப்புக்கு அல்ல; வேதனைக்கான தொடக்கம்.

Advertisement

நாவல் முழுக்க நாவலாசிரியர் பயன்படுத்தும் குரல் சராசரி கிராம மக்களின் பேச்சு வழக்காக காதில் ஒலிக்கிறது. அதேபோல, அவசர மருத்துவ உதவிகளை நம் வாழ்வில் இலகுவாகக் கலந்து இருந்ததை சில சம்பவங்கள் வாயிலாக சொல்கிறது இந்த நாவல்.

இயற்கை -மண்- பசுமை- இயற்கை சுழற்சி சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் நாவலின் நாயகன், மரபுவழி விவசாயத்தின் பயன்களைச் சொல்லி வென்று காட்டுவதுபோல் அமைந்திருப்பது நம்பிக்கை அளிக்கும் உத்தி.

இராம.செ.சுப்பையா நினைவு அறக்கட்டளை நடத்திய நாவல் போட்டியில் கடந்தாண்டு சிறப்பு பரிசு பெற்ற நாவல் இது. மரபுக் காய்கறி விதைகளைப் பரவலாக்கம் செய்ய பெருமுயற்சி எடுத்து வரும் இந்நாவலின் ஆசிரியர் 30-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இலக்கியப் பணிக்கான விருதுகள் மட்டுமல்லாமல், பசுமைப் பணிக்காக 30-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.