முகப்பு
நூல் அரங்கம்

மாதிரி ஆவணங்கள் பத்திரம் எழுதும் முறை! தெளிவான விளக்கங்களுடன்..

பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள் இந்நூலில் ஏராளம்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:16 AM
பகிர்:

மாதிரி ஆவணங்கள் பத்திரம் எழுதும் முறை! தெளிவான விளக்கங்களுடன்..- பதிப்பாசிரியர்: அ.பரஞ்ஜோதி; பக். 160; ரூ.180; ராஜாத்தி பதிப்பகம், சென்னை- 24; ✆ 99406 84644

பத்திரத்தில் உள்ள ஒரு வரி, ஒருவரை கோட்டையிலும் அமர வைத்துவிடும்; கோட்டையில் இருப்பவரை குடிசைக்கும் கொண்டுவிடும் என்பதுதான் இந்தப் புத்தகத்துக்கான அறிமுகம். பத்திர எழுத்துக்கு எந்த அளவு சக்தி உள்ளது என்பதை இந்த நூலின் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு சொத்து ஆவணத்தின் முக்கியத்துவம் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. மக்களுக்கு அதன் அவசியம் நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால், அதில் ஏற்படுகிற சின்னச் சின்னப் பிழைகளை எவ்வாறு சரியான முறையில் அணுகுவது, எப்படி தெளிவாக பத்திரம் எழுதுவது, சொத்துகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்று 35 ஆவணங்களின்மூலம் சிறப்பாக இன்றைய நடைமுறைகளுடன் இந்நூல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உரிமை மாற்றம் செய்ய உதவும் முக்கிய பத்திரங்களான விற்பனைப் பத்திரம் குறித்தும், தான செட்டில்மெண்ட் பத்திரத்துக்கும் தானப் பத்திரத்துக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும், பாகப் பிரிவினை பத்திரம் எழுதும்போது முக்கிய பொது வழி பற்றி எழுதாமல் விடுபட்டு, அதனால் ஏற்படும் பின்விளைவுகளைக் குறித்தும், உயில் எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் அந்தந்த பத்திர வடிவிலேயே விளக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் பத்திரம், பிழை திருத்துதல், அடமானம், சொத்துகளைப் பாதுகாக்க பயன்படும் பலமான பத்திரங்கள், வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை, தத்து ஆவணம், கூட்டு வியாபார ஒப்பந்தம், பொதுச் சுவர், பொதுக் கிணறு, மனைப் பிரிவுகளில் ஒதுக்கப்படும் சாலைகள், பரிவர்த்தனை ஆவணங்கள், செட்டில்மெண்ட், உயில், பொது அதிகாரம், விக்கிரைய ஆவணங்களை ரத்து செய்தல் என பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள் இந்நூலில் ஏராளம்.

முழு கட்டுரையைப் படிக்க →