மொஸாட்
துப்பறியும் நாவல்போன்று எழுதியுள்ளார் நூலாசிரியர்.
மொஸாட்; நன்மாறன் திருநாவுக்கரசு; பக். 168; ரூ.200; கிழக்கு பதிப்பகம்; சென்னை-14. ✆ 044-42009603.
அமெரிக்காவின் சிஐஏ, சோவியத் ரஷியாவின் கேஜிபி, இந்தியாவின் ரா, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ போன்று இஸ்ரேலின் உளவு அமைப்பு மொஸாட். உலகின் செல்வாக்குமிக்க, அதேவேளையில் சர்ச்சைக்குரிய உளவு அமைப்பாக அறியப்படும் மொஸாட், இஸ்ரேலின் நலனுக்காக என்று கூறி மேற்கொண்ட சில நடவடிக்கைகளை விறுவிறுப்பாக இந்நூல் விளக்குகிறது.
இஸ்ரேலில் ஷின் பெட், மொஸாட் என இரு உளவு அமைப்புகள் உள்ளன. இதில் மொஸாட்தான் வெளிநாடுகளிலிருந்து இஸ்ரேலுக்கு வரும் ஆபத்துகளைக் கண்டறிந்து, அதை எந்த வகையிலாவது தடுத்து நிறுத்தும் பணிகளைச் செய்கிறது.
இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தங்களால் கண்டறிய முடியாவிட்டாலோ, தடுக்க முடியாவிட்டாலோ அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையிலும் மொஸாட் ஈடுபடுகிறது என்பதுதான் அதன் மீதான சர்ச்சை. 1972-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இஸ்ரேல் வீரர்கள் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குக் காரணமான 'கருப்பு செப்டம்பர்' என அழைக்கப்பட்ட பாலஸ்தீன போராளிகள் குழுவை 'கடவுளின் சீற்றம்' என்ற திட்டத்தின்கீழ் தேடித் தேடி மொஸாட் செய்த படுகொலைகள் உலகப் பிரசித்தம்.
1976, ஜூனில் இஸ்ரேலிலிருந்து பாரீஸ் நோக்கி 248 பயணிகளுடன் சென்ற விமானம் பாலஸ்தீன போராளிகளால் உகாண்டாவுக்கு கடத்தப்பட்டது. அவர்களை மீட்க மொஸாட் நடத்திய அதிரடித் தாக்குதல் திரைப்படங்களையும் விஞ்சுவதாகும். இதுபோன்று மொஸாட் நடத்திய தாக்குதல்கள், தீட்டிய திட்டங்களை ஒரு துப்பறியும் நாவல்போன்று எழுதியுள்ளார் நூலாசிரியர்.