இந்திய மருத்துவ பொற்காலம்
இல்லங்களில் இருக்க வேண்டியதொரு வழிகாட்டி நூல்.
இந்திய மருத்துவ பொற்காலம் - ஜெகாதா; பக்.464; ரூ.440; அருணோதயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; ✆ 72008 36063.
பழம்பெரும் இந்திய நாட்டில் மருத்துவத் துறையின் தோற்றம் முதல் இன்றைய காலகட்டம் வரையிலான மருத்துவத் துறை வரலாற்றை 'ஏ டூ இசட்' துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல். கி.மு. 14000 முதல் 5000 வரையிலான மருத்துவம் ஆதிகால மருத்துவம் என்று குறிப்பிடப்படுகிறது. அப்போதே மண்டையோட்டில் துளையிட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள விவரம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்று தொடங்கி எகிப்திய மருத்துவம், பாபிலோனிய மருத்துவம், கிரேக்க மருத்துவம், சித்த மருத்துவம், யுனானி மருத்துவம், ஆயுர்வேதம் என்று பல்வேறு காலகட்டத்தில் தோன்றிய விவரங்களை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அரசர்களுக்கே என்று இருந்த மருத்துவத்தை மக்களுக்கும் என தமிழ் மன்னர்கள் வளர்த்த விவரமும் குறிப்பிடப்படுகிறது. தாசாசுரம், சிதம்பரம், விருத்தாசலம், ராமநாதபுரம், இராமலிங்கவிலாசத்தில் இடம்பெற்றுள்ள பிரசவகால சிற்பபங்கள், ஓவியங்களும் ஆதாரமாக வைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
இந்தியாவே மருத்துவ மையம், மண்டையோட்டுத் துளை மருத்துவமும் பௌத்தமும், விலங்குகளுக்கான வைத்தியக் குறிப்புகள், அறுவைச் சிகிச்சையும் சித்த மருத்துவ ஜோதிடமும், உடற்கூறு ஆய்வு செய்யும் சித்தர் பாடல்கள், அதிசயங்கள் நிகழ்த்தும் அக்குபஞ்சர்- அக்குபிரஷர், விஷ முறிவும் சித்தர் வழிகாட்டலும், ஆயுர்வேத மருத்துவ அற்புதம் உள்பட 17 தலைப்புகளிலான கட்டுரைகளைப் படிக்கும்போதுநூலில் இடம்பெற்றுள்ளன தகவல்கள் வியப்பில் ஆழ்த்துகின்றன. இல்லங்களில் இருக்க வேண்டியதொரு வழிகாட்டி நூல்.