முகப்பு
நூல் அரங்கம்

தமிழில் பெண்ணிய எழுத்துகள்

பெண்ணியம் தொடர்பான நூல்களில் இடம் பெற்றுள்ள கருத்துகளைத் தொகுத்து தந்திருக்கும் ஒரு பெருமுயற்சி இந்நூல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:16 AM
பகிர்:

தமிழில் பெண்ணிய எழுத்துகள் - அ.பிச்சை; பக்.294; ரூ.350; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை - 20; ✆ 90803 30200.

மற்ற எல்லா உயிரினங்களைப் போலவே மனித இனத்திலும் பெண்தான் முக்கிய பாத்திரம் வகித்தாள். ஆரம்பக் கட்டத்தில் மனித கூட்டத்துக்கு பெண்தான் தலைமை வகித்தாள்.

சமூகம் வளர வளரத்தான், தனிச்சொத்துரிமை உருவான பின்னர்தான் இன்றைக்கு எழுதப்பட்ட இலக்கியங்களைக் காண்கிறோம்; அவ்வாறு எழுதப்பட்ட எந்த சமூகத்தின் வரலாறும் ஆண்களின் பார்வையில் எழுதப்பட்டதாகத்தான் இருக்கிறது.

தமிழில் சங்க இலக்கியங்களில் ஓரளவு பெண் குரல்களை, அதன் சுதந்திரத்தைக் காணமுடிகிறது. அதற்குக் காரணம், அது ஒரே காலகட்டத்துடையது அல்ல.

’தமிழில் பெண்ணிய எழுத்துகள்’ என்ற இந்த நூல் இதை நோக்கிய ஒரு நகர்வைத்தான் நமக்குத் தருகிறது.

20-ஆம் நூற்றாண்டில் பெண்ணியம் சார்ந்த படைப்புகள் ஏராளமாக உருவாக்கம் பெற்றன. பாரதியாரின் புதுமைப் பெண்ணிலிருந்து தொடங்கி, அதன் தொடர்ச்சி விரிவு பெறுவதை இந்த நூல் வழியாகக் காண்கிறோம்.

பெண்களின் உரிமைகள் சார்ந்து பேசும் இலக்கியங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதுக்கவிதை இலக்கியத்துக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பு, இலக்கியங்களில் காணப்படும் உடலரசியல் பேசும் போக்குகள், மகளிரால் எழுதப்பட்ட கதைகள், இந்திய பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள், அவற்றின் பேசு பொருள்கள், நாவல்கள் பற்றிய விவரங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம் சார்ந்து வெளி வந்துள்ள நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகள் தொடர்பான கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

2001-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழில் வெளிவந்த பெண்ணியம் தொடர்பான நூல்களில் இடம் பெற்றுள்ள கருத்துகளைத் தொகுத்து தந்திருக்கும் ஒரு பெருமுயற்சி இந்நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →