இந்திய அரசிகள்
ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராகப் போர்க்களம் கண்ட பல்வேறு அரசிகளில் வேலு நாச்சியாரும், ஜான்ஸி ராணியும் குறிப்பிடத்தக்கவர்கள் என்று இந்நூல் பதிவு செய்கிறது.
இந்திய அரசிகள் - முருகுதமிழ் அறிவன்; பக்.160; ரூ.200; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044-4200 9603.
சரித்திரம் எப்போதும் அரசர்களையே நினைவில் வைத்திருக்கிறது. அரசர்களின் பெயர்கள் நினைவுகூரப்படும் அளவுக்கு ஒன்றிரண்டு அரசிகளின் பெயர்களைத் தவிர வேறு பெயர்கள் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.
வேலு நாச்சியார், இராணி மங்கம்மாள், ஜான்ஸி ராணி உள்பட பல்வேறு அரசிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைத் திறம்பட ஆட்சி புரிந்துள்ளனர். அவ்வாறான 22 அரசிகளின் வரலாற்றைச் சுருக்கமாகவும் சுவைபடவும் இந்நூல் விவரிக்கிறது.
ஒளரங்கசீபின் பாதுகைக்கு மரியாதை, கப்பம் செலுத்த மறுத்த கிருட்டிண முத்து வீரப்ப நாயக்கனின் தாயார்தான் ராணி மங்கம்மாள். ராணி மங்கம்மாளின் வீரத்தைப் பறை சாற்ற இந்நிகழ்வு ஒன்றே போதும். தனது பெயரனால் சிறையிடப்பட்ட ராணி மங்கம்மாள் தனது இறுதிக்காலத்தை சிறையில் கழித்தார் என்கிற தகவல் வரலாற்று சோகம்.
வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்களின் துணையோடு ஆங்கிலேயரை விரட்டியடித்ததும், அவரிடம் தளபதியாக இருந்த குயிலியின் தியாகமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. வடக்கில் ஜான்ஸி ராணி உருவெடுப்பதற்கு 200 ஆண்டுகள் முன்பே வேலு நாச்சியார் போராளியாக உருவெடுத்தார் என்பதும், தற்கால வரலாறு அறிந்த முதல் தற்கொலைப் போராளி குயிலி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிப்பாய்க்கலகம் என்ற முதல் விடுதலைப் போர் நடந்த தருணத்தில் இணைந்துகொண்ட ஒரு முன்னணி போராட்ட அரசியாக ஜான்ஸி ராணி திகழ்ந்துள்ளார்.
ஆங்கில ஆட்சி இந்தியாவில் ஏறத்தாழ 250 ஆண்டுகள் நடைபெற்றது. ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராகப் போர்க்களம் கண்ட பல்வேறு அரசிகளில் வேலு நாச்சியாரும், ஜான்ஸி ராணியும் குறிப்பிடத்தக்கவர்கள் என்று இந்நூல் பதிவு செய்கிறது.