SWAMINATHAN
நூல் அரங்கம்

கறுப்பு ரட்சகன்

அதிகளவில் கறுப்பு ரட்சகர்கள் தேவைப்படுகிற இப்போதைய காலத்தில் அவன் எத்தகையவனாக இருப்பான், எத்தகையவனாக இருக்க வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக அறிமுகப்படுத்தி நாவலாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

தினமணி செய்திச் சேவை

கறுப்பு ரட்சகன் - நாவல்-எவிடென்ஸ் கதிர்; பக்.496; ரூ. 600; கிழக்கு பதிப்பகம், சென்னை - 600 004, ✆ 044-4200 9603.

எவிடென்ஸ் கதிரின் படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்துவதாக வெளிவந்திருக்கும் முதல் நாவல். மனித மனங்களின் மீதும் விழுமியங்களின் மீதும் நம்பிக்கை கொண்ட ஒரு மருத்துவரைச் சுற்றிப் பின்னப்பட்ட நாவல்; என்றாலும் மக்களுக்குத் தாம் கடத்த நினைக்கிற எண்ணங்களையெல்லாம் பாத்திரங்களின் செயல்கள், உரையாடல்கள் வழிச் செய்திருக்கிறார் ஆசிரியர்.

எல். உடையாள்புரம் சேரியில், பிறக்கும்போதே தாயை இழந்தவனாகப் பிறக்கிறான் மரியா என்ற மரியநாதன். குழந்தையாகத் தந்தையுடன் பெங்களூரு சென்று தேவாலயத்துடன் இணைந்த வாழ்வு. படிப்பு, மருத்துவம், தொண்டு ஆகியவற்றுடன் நாவல் நெடுகிலும் மரியாவுடன் அனைவருடைய அன்பும் கலந்தோடுகிறது.

'நியாயத்துக்காக எதையும் இழக்கலாம். அது இழப்பு அல்ல, பெருமை' என்கிறார் மாணவனான மரியாவிடம் அவர் தந்தை பெரியநாயகம்.

நாவலின் மையப் புள்ளியாகத் திகழும் பிரான்ûஸச் சேர்ந்தவரான அருள்தந்தை ஆந்த்ரேயின் பாத்திரம் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பவராக ஒவ்வொரு தருணத்திலும் மரியாவை வழிநடத்துகிறது. நாட்டின் விடுதலைக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் நகரும் நாவலில் அன்றைய மருத்துவத் துறைச் சூழலும்கூட வெளிப்படுகிறது.

பாதர் சவரிநாதன், பாத்திமா, அசலாம்பாள், ஜெயப்பிரகாஷ், நடராஜன் முதலியார் என நாவலில் வருகிற ஒவ்வொருவரும் அவரவர் பங்கிற்குச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள், அவர்களுடைய உரையாடல்கள். நிறைவில் அரசியலுக்குள்ளும் நாவல் செல்கிறது.

அதிகளவில் கறுப்பு ரட்சகர்கள் தேவைப்படுகிற இப்போதைய காலத்தில் அவன் எத்தகையவனாக இருப்பான், எத்தகையவனாக இருக்க வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக அறிமுகப்படுத்தி நாவலாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

பொன்மேனி உருகுதே... அங்கிதா சர்மா!

3-வது முறையாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகும் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT