SWAMINATHAN
நூல் அரங்கம்

ராய சிம்மாசனம்

விஜயநகரப் பேரரசின் மாபெரும் ஆட்சியாளரான கிருஷ்ணதேவ ராயரின் வாழ்க்கைக் காலத்தை மையமாக வைத்து அவரைச் சுற்றி நடந்த நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்ட நாவல் இது.

தினமணி செய்திச் சேவை

ராய சிம்மாசனம்-ஸ்ரீமதி; பக்.728; ரூ.800; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 127, ✆ 81480 66645.

விஜயநகரப் பேரரசின் மாபெரும் ஆட்சியாளரான கிருஷ்ணதேவ ராயரின் வாழ்க்கைக் காலத்தை மையமாக வைத்து அவரைச் சுற்றி நடந்த நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்ட நாவல் இது. குறிப்பாக அரசியல் சதிகள், சூழ்ச்சிகள், அதிகாரத்துக்காக நடந்த போட்டிகள், இன்னும் பல அரசர்கள்கால நிகழ்வுகள் சுவாரஸ்யமாக முழுமையாகத் தரப்பட்டுள்ளன.

கிருஷ்ணதேவ ராயரின் 12 தேவியர் நவராத்திரி இறுதி நாளான துர்கா பூஜைக்குச் செல்லும் நிகழ்வில் இருந்து தொடங்குகிறது இந்த நாவல். மன்னரின் தேவியர்கள் புறப்படும்போது அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை அந்தக் காலத்தில் எப்படி செய்திருந்தார்கள் என்பதை வாசிக்கும்போது நாவலில் கவனம் குவிகிறது.

ஒரு ஆட்சி நிர்வாகத்தில் விசுவாசமான ஊழியர்களை உரிய பதவியில் அமர்த்தி ஆட்சியை விரிவுபடுத்துவதையும், அதற்கான திட்டங்கள், வழிமுறைகளை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை விஜயநகரப் பேரரசர் எப்படிக் கையாண்டார் என்று தெரிந்துகொள்ள முடிகிறது. கதாபாத்திரங்களுக்கு பெயர் வைப்பதுமுதல் அவர்களது குணாதிசயங்களை வகைப்படுத்தி வாசகர் மனதில் காட்சிப்படுத்துவது எளிததல்ல. அது இந்த நாவலாசிரியருக்கு நன்றாக வாய்த்திருக்கிறது.

அழகியலோ ஆக்ரோஷமோ எதுவாக இருந்தாலும் காட்சிகளை வாசகனுக்குப் புரியும்படியான எழுத்து நடையில் கூறுவது நாவலுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

அரண்மனையில் உள்ள அரங்குகள், ஒளி அமைப்புகள் என ஒரு கலை இயக்குநருக்குத் தேவையான ஏராளமான தரவுகள்; 'காரணம் என்பது கோழையின் ஆயுதம்; அதை வீரன் பயன்படுத்தினால் கோழையைவிட கீழானவனாக மாறிவிடுவான்..' என்பது போன்ற வாக்கியங்கள் இந்த நாவலை முழுவதுமாக வாசித்து முடிக்கும்போது, இதில் ஒரு திரைப்படத்துக்குத் தேவையான அம்சங்கள் அடங்கியுள்ளன என்று புலப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவீன சீரியலின் முடிசூடா மன்னர் திருமுருகன்: வைரலாகும் விடியோ!

ஓடிடியில் ஆர்யன்: இந்த வார படங்கள்!

கூடைப்பந்து வீரர் உயிரிழப்புக்கு பாஜக அரசுதான் காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பும்ரா செய்தது மட்டும் நியாயமா? தெ.ஆ. அணியின் கேப்டன் பவுமா கேள்வி!

அரசியலமைப்பின் மீது அக்கறை இருப்பதாக பாஜக-ஆர்எஸ்எஸ் பாசங்கு: கார்கே!

SCROLL FOR NEXT