விலக மறுக்கும் திரைகள் - பா.ஜீவசுந்தரி; பக்.98; ரூ. 150; ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடு, சென்னை-600 083, ✆ 96003 98660.
பல இதழ்களில் ஆசிரியராகப் பொறுப்பில் இருந்திருக்கிறார் இந்நூலின் கட்டுரையாளர். பெண்ணியம் சார்ந்த கட்டுரையாகத்தான் இருக்கும் என எதிர்பார்த்தால் அப்படி இல்லை. சமூகத்தின் பல தளங்களில் மக்கள் நலன் கருதி வெளிப்படுத்திய தனது பார்வையைக் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
பெண்ணியம் என்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தில் நிகழக்கூடிய பிரச்னைகள், சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான பிரச்னைகள் மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள், மாணவர்களுக்கு தேவைப்படும் சீர்திருத்த சிந்தனைகள், மாற்றங்கள் குறித்த கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் வெடித்துக் கொண்டிருந்த பட்டாசுகள் ஆண்டு முழுவதும் வெடிக்க ஆரம்பித்ததன் விளைவு குறித்தும், ஆயுத பூஜைக்கு உடைக்கும் பூசணிக்காய்கள், விநாயகர் சதுர்த்தியில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளைக் கரைத்து நீரை மாசுபடுத்தி சுற்றுச்சூழலை களங்கப்படுத்துதல், மதச் சடங்கானாலும் தவறு என்று துணிச்சலுடன் சுட்டிக்காட்டுகிறது 'சத்தக் களங்கத்தை எவ்வாறு ரசிப்பது' என்கிற தலைப்பிலான கட்டுரை.
கருக்கலைப்பு குறித்த சட்டப் பாதுகாப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைத் திருமணம், ரஷியா- உக்ரைன் போர், கல்லூரியில் ராகிங் கொடுமை என பல சமூகப் பக்கங்களில் உள்ள பிழைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 23 கட்டுரைகளில் பெரும்பான்மை பெண்ணியம் சார்ந்தவையே. ஆனாலும், அனைத்தும் மக்கள் நலன் என்கிற மையக் கருத்தை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.