விஜய பாரதம் தீபாவளி 2025- பி.வெள்ளைத்துரை, பக்.448; ரூ.100; சென்னை - 600 084. ✆ 044 - 2642 1271.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இந்த தீபாவளி மலர் நூற்றாண்டு சிறப்பு மலராக கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் வளர்ந்த விதம் குறித்து ராஜேஷ், முனைவர் இரா.வன்னியராஜன் ஆகியோர் சுருக்கமாக விவரித்துள்ளனர்.
நூற்றாண்டையொட்டி, ஆர்எஸ்எஸ் அமைப்பு அக்டோபரில் தொடங்கி அடுத்த ஓராண்டுக்கு எந்தவிதமான செயல்திட்டங்களை வகுத்துள்ளது என்பது குறித்தும் சம்ஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம், பெண்களுக்கு முக்கியத்துவமின்மை போன்றவை குறித்தும் அகில பாரத நிர்வாகி (பிரசார் பிரமுக்) சுனில் அம்பேகர் பேட்டியில் விரிவாகக் கூறியுள்ளார்.
இயக்கம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளுடன் குடும்பங்களில் அறநெறிகள் குறித்த விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாத்தல், அந்நிய மோகத்தை அகற்ற சுயத் தன்மை, ஜாதி மோதல், தீண்டாமையை அகற்ற சமுதாய நல்லிணக்கம், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றை பொதுமக்களிடையே கொண்டு செல்ல ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது.
அதற்கேற்ப குடும்பங்களில் அறநெறி விழிப்புணர்வு குறித்து வானதி சீனிவாசன் எம்எல்ஏ, பேராசிரியர் ப.கனகசபாபதி, ஜனனி ரமேஷ், சுற்றுச்சூழல் பாதுகாத்தல் குறித்து ஜெயஸ்ரீ சாரநாதன், புதுகை ச.பாரதி, சமுதாய நல்லிணக்கம் குறித்து குரு சுப்ரமணியன், ஆத்தூர் பாலாஜி, சுயத் தன்மை குறித்து ராஜா பரத்வாஜ், ஆடிட்டர் சுந்தரம், கர்னல் தியாகராஜன், குடிமக்களின் கடமைகள் குறித்து முனைவர் க.குமாரசுவாமி, வெ.இன்சுவை உள்ளிட்ட பலரும் வெவ்வேறு கோணங்களில் விளக்கி உள்ளனர்.
விமலா ரமணி, சுபா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோரின் சிறுகதைகளும், பல்வேறு கவிஞர்களின் கவிதைகளும் மலருக்கு அணிசேர்க்கின்றன.
சமுதாயப் பணியில் அனைவரின் பங்களிப்பையும் வலியுறுத்தும் வகையில் இந்த மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.