இசைஞானி இளையராஜாவின் முதல் சிம்பொனி-அக்கினி பாரதி, பக்.292; ரூ.300, கனவுத்தமிழ்ப் பதிப்பயம், சென்னை-600 031, ✆ 98403 21522.
'சிம்பொனி' என்றால் என்ன? அதன் இசைக் கோர்வையின் வகைகள் எத்தனை? அதற்கான தகுதிகள் எவை என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலை சராசரி இசை ரசிகர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் தெளிவாகத் தந்திருக்கும் நூல் இது.
இளையராஜாவின் இசைப் பயணம் ஒரு புறம் என்றால், சிம்பொனி இசையின் தோற்றம், வளர்ச்சி, காப்புரிமை, முக்கிய ஆளுமைகள், இளையராஜாவின் இந்திய இசையானது 'சிம்பொனி'யுடன் பொருந்திய விதம் என இன்னொரு புறம் ஏராளமான தகவல்கள் இந்த நூலில் பொதிந்து கிடக்கின்றன.
இளையராஜாவின் திரைப்பட பாடல் வழியாக நமக்கு 'சிம்பொனி'யைப் புரியவைக்கிறார் நூலாசிரியர். கர்நாடக சங்கீதத்தையே நம் மனதில் உயர்த்திப் பிடித்திருக்கிறோம். ஆனால், மேற்கத்திய இசையின் வருடல்களில் கிடைக்கும் ஆன்மாவின் உணர்வை நாம் புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம் என்கிற நூலாசிரியரின் கோபம், நாம் இன்னும் முழுமையான இசையைப் புரிந்தும், உணர்ந்தும் ரசிக்கவில்லையோ என்கிற ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.
இளையராஜாவின் முதல் 'சிம்பொனி' வெளிவர இத்தனை ஆண்டுகள் ஆனதற்கான காரணத்தை அறியும்போது, மேட்டுக்குடி இசைக்கும் செவ்வியல் இசைக்குமான போட்டி உலகெங்கும் நீடிக்கத்தான் செய்கிறது என்கிற தகவலும், மேற்கத்திய சேவையில், இசை மூலவர்களில் ஐந்தாவதாக இளையராஜா இனி போற்றப்படுவார் என்பதும் கவனிக்கத்தக்கவை.
இளையாராஜாவின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இசையை விரும்புபவர்களுக்கும் தரவுகளுடன் கூடியது இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.