கலைமகள் அருள் பெற்ற கதாசிரியர்கள்
களை மட்டும் பகிர்ந்து கதாசிரியர்களின் நினைவுகளை நம்முள் நிறுத்தும் பாங்கு இந்த நூலின் தனிச் சிறப்பு. மேலும், அந்த ஜாம்பவான்கள் குறித்த புகைப்படங்கள் நல்லதொரு ஆவணம்.
கலைமகள் அருள் பெற்ற கதாசிரியர்கள்-கலைமாமணி பி.ஆர். துரை; பக். 352; ரூ. 450; அன்னை புத்தகாலயம், சென்னை-600 017, ✆ 94441 26523.
'சரஸ்வதி கடாட்சம் கிடைத்தால் லட்சுமி கடாட்சமும் சீக்கிரமே கிடைக்கும்' என்கிற ஏழிசை வேந்தர் தியாகராஜ பாகவதரின் வார்த்தையை தனது இல்லத்தில் கேட்டிருக்கிறார் நூலாசிரியர். அந்தக் கலைமகளின் அருள்பெற்ற கதாசிரியர்கள் குறித்த அரிய குறிப்புகள் கொண்ட தொகுப்புதான் இந்நூல்.
நாடகத் துறையின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை உள்ள 73 ஜாம்பவான்கள் குறித்த தனது 70 ஆண்டு கால நினைவுகளை, தான் சந்தித்துப் பழகிய நிகழ்வுகளை அவர்கள் குறித்த பெருமைகளை சுவாரஸ்யமாக பதிவிட்டுள்ளார் நூலாசிரியர்.
சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், எஸ்.டி. சுந்தரம், கலைவாணர் என பட்டியலில் எல்லோருடைய பெயரையும் வாசிக்கும்போது, அவர்கள் பரிணமித்த பாத்திரங்கள் நம் நினைவுக்கு வருகின்றன.
நாடக வசனம் எழுதுவது எளிதானதல்ல. பார்வையாளர்களை எந்தவித கவனச் சிதறலுக்கும் உள்ளாக்காமல், தனது எழுத்தின் வலிமையால் அவர்களை இருந்த இடத்தில் அப்படியே அமர வைத்ததை நினைத்துப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
நாடக அரங்கங்கள், விருதுகள், நாடகங்களின் பெயர்கள் என தரவுகளை எல்லாம் பார்க்கும்போது நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்கிறது இந்தத் தொகுப்பு. கூடுதல் தகவல்களைத் தந்து திகட்ட வைக்காமல், தேவையான தரவு
களை மட்டும் பகிர்ந்து கதாசிரியர்களின் நினைவுகளை நம்முள் நிறுத்தும் பாங்கு இந்த நூலின் தனிச் சிறப்பு. மேலும், அந்த ஜாம்பவான்கள் குறித்த புகைப்படங்கள் நல்லதொரு ஆவணம்.