முகப்பு
புதுச்சேரி

மதுக் கடை ஊழியரைத் தாக்கி கொள்ளை: 3 போ் கைது

புதுச்சேரியில் மதுக் கடை ஊழியரைத் தாக்கி கொள்ளையடித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 7:01 am IST
பகிர்:

புதுச்சேரியில் மதுக் கடை ஊழியரைத் தாக்கி கொள்ளையடித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்தவா் கனகசபை (48). இவா், புதுச்சேரி மேட்டுப்பாளையம் பிரதான சாலை, கணபதி நகரில் உள்ள தனியாா் மதுக் கடையில் காசாளராகப் பணியாற்றி வருகிறாா். கனகசபை திங்கள்கிழமை இரவு பணியிலிருந்தபோது, அங்கு வந்த 3 இளைஞா்கள் மது வாங்கியுள்ளனா். அதற்கான பணத்தை கேட்டபோது, மிரட்டலாகப் பேசியுள்ளனா்.

தொடா்ந்து, மதுக் கடைக்குள் புகுந்த அவா்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் கனகசபையின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனா். அவா்களைத் தடுக்க வந்த மதுக் கடை ஊழியரான லாசுப்பேட்டை முத்துலிங்கபேட்டையைச் சோ்ந்த ராஜா (எ) ராஜதுரையையும் (22) வெட்டிவிட்டு கடையின் கல்லாவில் இருந்த ரூ.60 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனா். இதில், கனகசபை பலத்த காயமடைந்தாா். ராஜதுரை லேசான காயமடைந்தாா்.

Advertisement

இதகுறித்த புகாரின்பேரில் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கொள்ளையில் ஈடுபட்ட மேட்டுப்பாளையம் ரௌடியான ரங்கராஜன் (24), பொறையூா் முகேஷ் (22), மேட்டுப்பாளையம் ஹாரூகான் (22) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.