முகப்பு
ஆன்மிகம்

ஸ்ரீவிலி. ஸ்ரீஐயப்பன் கோயிலில் 44-வது மண்டல பூஜை

ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வகாம் ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு ஸ்ரீஐயப்பன் திருக்கோயிலில் 44-வது மண்டல பூஜை நடைபெற்றது.

ஆன்மிகம்

ஸ்ரீவிலி. ஸ்ரீஐயப்பன் கோயிலில் 44-வது மண்டல பூஜை

ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வகாம் ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு ஸ்ரீஐயப்பன் திருக்கோயிலில் 44-வது மண்டல பூஜை நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வகாம் ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு ஸ்ரீஐயப்பன் திருக்கோயிலில் 44-வது மண்டல பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செவ்வாய்கிழமை காலை ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, சங்கல்பம், ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹோமம், ஸ்ரீநவக்ரஹ ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. நேற்று 1008 சங்கு பூஜை, 108 கலச பூஜை, சிவாகம மந்திர, வேத மந்திர ஜெப பாராயணங்கள், வேத மந்திர, காயத்ரி, மந்திர மூல மந்திர அஸ்த்திர மந்திர ஹோமங்கள், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடைபெற்று சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இரவு மங்கல வாத்தியம், கேரளா ஜண்டை மேளம் முழங்க மிகப்பிரமாண்டமான பூப்பல்லக்கில் ஸ்ரீஐயப்பன் சுவாமி நகர ரத வீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அருள்மிகு புழுங்கலரிசி பிள்ளையார் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் தலைவர் பி.கிருஷ்ணன், உதவித் தலைவர் எஸ்.சொக்குமுத்து, பொருளாளர் ஜி.ஜெயராஜ், கோயில் செயல் அலுவலர் பெ.சரவணன், தக்கார் எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →