ஆநிரைத் தலைவனாக காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள்
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆநிரைத் தலைவனாக (பசுக் கூட்டத் தலைவன்) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆநிரைத் தலைவனாக (பசுக் கூட்டத் தலைவன்) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வைணவத் திருத்தலமான சிறப்பு மிக்க காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் மூலவரான ஸ்ரீ ரங்கநாதர் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். உற்ஸவர், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் உற்ஸவருக்கு பல்வேறு வகையான அலங்காரம் செய்து வழிபடுவர்.
இந்தப் புரட்டாசி முதல் சனிக்கிழமை (22.9.2011) ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் மலையப்பசுவாமியாக அருள்பாலித்தார். 2-வது சனிக்கிழமையான (29.9..2012) ஆநிரைத் தலைவனாக (பசுக் கூட்டத்தை மேய்ப்பவராக) பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று உற்ஸவரையும், மூலவரையும் வழிபாட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில் நிர்வாகமும், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவும் செய்திருந்தது.