ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (புதன்) ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டம்: ஆயிரம் போலீஸார் குவிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் தேரோட்டம் 30-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுவதையொட்டி 5 டி.எஸ்.பி.கள் தலைமையில் 1000 போலீஸார்
ஆன்மிகம்ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (புதன்) ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டம்: ஆயிரம் போலீஸார் குவிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் தேரோட்டம் 30-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுவதையொட்டி 5 டி.எஸ்.பி.கள் தலைமையில் 1000 போலீஸார்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் தேரோட்டம் 30-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுவதையொட்டி 5 டி.எஸ்.பி.கள் தலைமையில் 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பூமிப்பிராட்டியாம் ஸ்ரீஆண்டாளின் திருஅவதார தினமான ஆடிப்பூர நன்நாளைக் கொண்டாடும் விதமாக, ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா 22-ம் தேதி (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாள்கள் நடைபெறும் இந்த பெருவிழாவில், 9-ம் திருநாளான 30-ம் தேதி (புதன்கிழமை) காலை 9.05 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.
தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பூ.செந்தூர்பாண்டியன், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இந்து சமய அறநிலையத் துறை உயர்நிலை ஆலோசனைக்குழு உறுப்பினர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன், வெ.பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.
விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகைபுரிந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். இதற்காக 5 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 1000 போலீஸார் செவ்வாய்கிழமை மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளனர்.
இவர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நகரின் முக்கிய இடங்களில் போலீஸார் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தி சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் கண்காணித்து வருகிறார்கள்.