முகப்பு
ஆன்மிகம்

ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு ஆடிப்பூர மகோத்சவம் ஆக.,7ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு (தஞ்சாவூரிலிருந்து 13 கி.மி தூரத்தில் உள்ளது) ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாதி தேஸ்தானத்தில் ஆடிப்பூர மகோத்சவம் நடைபெறுகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:21 AM
பகிர்:

திருக்கயிலாய பரம்பரைத் தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு (தஞ்சாவூரிலிருந்து 13 கி.மி தூரத்தில் உள்ளது) ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாதி தேஸ்தானத்தில் ஆடிப்பூர மகோத்சவம் நடைபெறுகிறது.

ஆடிப்பூர மகோத்சவம்

ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு ஆடிப்பூர மகோத்சவம் ஆக 7-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 17 வடி நடைபெறுகின்றது. விழா நாட்களில் உற்சவ மூர்த்தி அம்பாள் காலையில் பல்லக்கிலும், இரவு விசேஷ வாகனங்களிலும் ஆக.,15-ம் தேதி ரதத்திலும் பவனி வருதல் நடைபெறும். மேலும் இந்த விழாவை முன்னிட்டு அறிஞர் பெருமக்கள் பங்கேற்கும் உரையரங்கமும், இன்னிசை கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

அப்பர் கயிலைக் காட்சி விழா

ஆகஸ்ட் 14-ம் தேதி ஆடி அமாவாசையன்று அப்பர் பெருமானுக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி நல்கும் விழா நடைபெறுகின்றது. இதனையொட்டி அன்று காலை காவிரியில் பஞ்சமூர்த்திகள் தீர்த்த வாரியும் தொடர்ந்து முற்பகலில் மேட்டுத்தெரு அபீஷ்ட வரத மகாகணபதி சந்நதிக்கு எதிரில் உள்ள உப்பன்குட்டை என்று அழைக்கப்படும் திருக்குளத்தில் அப்பர் பெருமான் எழுந்தருளும் காட்சியும், இரவு பஞ்சவன் மாதே வீச்சரம் என வழங்கும் தென்கயிலாயத்தில் இறைவன் கயிலாய தரிசனம் கொடுத்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இவ்விழாவினை சிறப்பிக்கும் விதமாக ஆகஸ்ட் 4 முதல் பன்னிரு திருமுறை முற்றோதல் நடைபெற்று வருகிறது.

மேலும் தகவல்களுக்கு: 9443150332

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.