ஆங்கில புத்தாண்டன்று காக்களூர் சிவவிஷ்ணு ஆலயத்தில் 3-ம் ஆண்டு லட்சார்ச்சனை பெருவிழா
திருவள்ளூர் அருகில் காக்களூர் பூங்கா நகரில் உள்ள சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஜனவரி 1-ம் தேதி ஸ்ரீ....
திருவள்ளூர் அருகில் காக்களூர் பூங்கா நகரில் உள்ள சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஜனவரி 1-ம் தேதி ஸ்ரீ புஷ்பவனேஸ்வர சுவாமிக்கு வேதசார சிவ சகஸ்ரநாம அர்ச்சனையும், ஸ்ரீநிவாச பெருமாளுக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து நடைபெறுகின்றது.
மேலும், இவ்வாலயத்தில் சிறப்புமிக்க ஸ்ரீ ஜலநாராயணர் சந்நதி அமையப்பெற்றுள்ளது. அன்று முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக ஆலயம் திறந்திருக்கும்.
தகவல்களுக்கு: 044-2766457, 9443119861