முகப்பு
ஆன்மிகம்

அருள்மிகு சிவாகமசுந்தரி சமேதர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா

பழனி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் அருள்மிகு சிவாகமசுந்தரி சமேதர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா திங்கள்கிழமை சிவவாத்தியம் முழங்க விமரிசையாக

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

பழனி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் அருள்மிகு சிவாகமசுந்தரி சமேதர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா திங்கள்கிழமை சிவவாத்தியம் முழங்க விமரிசையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் அருள்மிகு சிவாகமசுந்தரி சமேதர் ஸ்ரீசிதம்பரேஸ்வர் ஆலயம் கட்டும் பணி திங்கள்கிழமை துவங்கியது. நிகழ்ச்சிக்கு சிவாலயத்திருப்பணி கமிட்டி தலைவர் தங்கராஜ் வரவேற்புரை வழங்கினார்.  திருக்கழுக்குன்றம் தாமோதரன், சின்னச்சாமி கவுண்டர், வினை.சின்னச்சாமி கவுண்டர், புலவர் கந்தசாமிக்கவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமிபூஜையை முன்னிட்டு சங்குஸ்தாபனத்துடன் தத்துவ ஆத்யேயஷ்டிகா ஸ்தாபனம் செய்யும் பணி பழனி திருக்கோயில் வேதசிவாகம பாடசாலை முதல்வர் பாலசுப்ரமணிய சிவாச்சார்யார் மற்றும் பலர் வேதமந்திரம் முழங்க தொடங்கப்பட்டது. பிரமாண்டமான குழி தோண்டப்பட்டு ஸ்தானபம் செய்யப்பட்ட கட்டிட துவக்கத்தில் தங்கம், பொன், பட்டுத்துணி, மலர்கள், நவதானியங்கள் இடப்பட்டது.  ஏராளமானோர் பால் ஊற்றி வழிபட்டனர்.  தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் ஊற்றப்பட்டது. 

விழாவில் திருக்கயிலாய பரம்பரை திருப்பனந்தாள் ஆதினம் குருமஹாசன்னிதானம் ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், ஆனைக்கட்டி ஆர்ஷ்வித்யா குருகுலம் ஸ்ரீததேவானந்த சுவாமிகள் உள்ளிட்ட பலர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டி தீபாராதனையில் பங்கேற்று அருளாசி வழங்கினர்.  விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான கிராமமக்கள் கூடியிருந்து பூஜைகளில் பங்கேற்றனர்.

அடிக்கல் நாட்டுவிழாவைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.  நிகழ்ச்சியில், தொப்பம்பட்டி ஒன்றியகுழு துணைத் தலைவர் செல்லாத்தாள் நாராயணசாமி, ஊராட்சி தலைவர் ஜானகி சின்ராஜ், கிளை செயலாளர் துரைச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.