திருமுறை இசைவிழா
அரனருள் சார்பாக நடத்தப்படும் பன்னிரண்டாம் ஆண்டு திருமுறை இசைவிழா இன்று காலை
அரனருள் சார்பாக நடத்தப்படும் பன்னிரண்டாம் ஆண்டு திருமுறை இசைவிழா இன்று காலை கோலாகலமாக சென்னை மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலிருந்து பன்னிரு திருமுறை நூல்கள் திருவீதி உலாவுடன் ஆரம்பமாயிற்று.
பாரிமுறை எஸ்பிளனேடு சாலை இராஜா அண்ணாமலைமன்ற வளாகத்தில் மார்ச் 20 வரை நடைபெற உள்ள இந்த இசை விழாவினை திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் துவக்கி வைத்து ஆசியுரை வழங்கினார்கள்.
விழா நாட்களில் தினசரி காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் திருமுறைத் தலங்களின் திருமுறை இசையும், திருமுறை சிறப்புச் சொற்பொழிவரங்கமும் மாகேஸ்வர பூஜைகளும், தேவாரப் பண்ணிசை பயிற்சி அரங்கமும் திருமுறை இசை அரங்கமும் இடம் பெற்றுள்ளன. இந்த விழாவில் தலைசிறந்த ஓதுவார் பெருமக்களும், இசை வல்லுனர்களும், கலைஞர்களும், சமயச் சொற்பொழிவாளர்களும் பங்கேற்று கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். திருமுறைக்கு அருந்தொண்டாற்றியவர்களுக்கு பட்டமளித்து பொற்கழியும் வழங்கப்படுகிறது. மார்ச் 20ம் தேதி தெய்வச் சேக்கிழார் திருநாளாகக் கொண்டாடப்பட்டு நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றது. விழாவில் அயல் நாட்டிலிருந்தும் அன்பர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் தகவல்கள் பெறவும், ஆண்டுதோறும் இந்த திருமுறை இசைவிழா சிறப்பாக நடைபெற உதவி செய்ய விரும்புவர்களும் அரனருள் ஸ்தாபகர் ஓதுவாமூர்த்தி சாமி.தண்டபாணியை தொலைபேசி: 9444156335 ஐ தொடர்பு கொள்ளலாம்.