ஆன்மிகம்

குருபெயர்ச்சி: ஆலங்குடி குருபகவான் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

தினமணி

குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு செவ்வாய்க்கிழமை பெயர்ச்சியடைந்தையொட்டி, ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி கோயிலில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு முதலாம் கால யாக பூஜை தொடங்கி இரவு 8.30 மணியளவில் நிறைவடைந்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இரண்டாவது கால யாக பூஜைகளும், அதைத் தொடர்ந்து அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வரபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சந்தனக்காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. குருபகவானுக்கு தங்கக்கவசம் சாற்றப்பட்டது. காலை 9.30 மணியளவில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியான நேரத்தில் குருபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் உள்ளிட்ட அனைத்து ராசிக்காரர்களும் குருபகவானை வழிபட்டு பரிகாரம் செய்து கொண்டனர். தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். புதுச்சேரி காவல் துறை ஐ.ஜி. கண்ணன்ஜெகதீசன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் பார்த்திபன் உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT