தேவாரத் திருப்பதிகம் பெற்ற கொங்கு நாட்டில் 3-வது தலம் திருநணா என்னும் பவானி.
காவிரி, பவானி, அமிர்தநதி சங்கமிக்கும் மகா புண்ணிய ஸ்தலம். இங்கு சின்னக்கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீ விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இவ்விழா, மார்ச் 18-ம் தேதியன்று காலை 9.15 மணிக்கு மேல் 10.15-க்குள் திருத்தேர் வெள்ளோட்டத்தை தொடர்ந்து மார்ச் 23-ம் தேதி காலை 5 மணிக்கு திருக்கல்யாணமும் திருத்தேரோட்டமும் நடைபெறுகின்றது. மார்ச் 26-ம் தேதி நடராஜர் அபிஷேக தரிசனத்துடன் விழா நிறைவடைகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.