ஆன்மிகம்

ஆடி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம்

தினமணி


ஆடி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர்,

ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடைபெறும் என்பது ஐதீகம். எனவே, மாதம்தோறும் பௌர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

ஆடி மாத பௌர்ணமியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு 11.31 மணி முதல் திங்கள்கிழமை இரவு 12.02 மணி வரை திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

எனினும், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். மாலை 6 மணிக்குப் பிறகு பக்தர்களின் வருகை அதிகரித்தது. தொடர்ந்து, விடிய விடிய திங்கள்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், ஆதி அருணாசலேஸ்வரர் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில்களிலும், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளிலும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் நலன் கருதி தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT