ஆன்மிகம்

இந்த கனவு வந்தால் வீட்டில் டும்...டும் தான்!

நாம் தூங்கும் போது ஆழ்மனதில் பதிந்து இருக்கும் சம்பவங்கள் அனைத்தும் நமக்கு கனவாக வரும் என்பார்கள். சரி, அப்படி வரும் ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கும் அது என்னவென்று பார்ப்போம் வாருங்கள்

தினமணி

நாம் தூங்கும் போது ஆழ்மனதில் பதிந்து இருக்கும் சம்பவங்கள் அனைத்தும் நமக்கு கனவாக வரும் என்பார்கள். சரி, அப்படி வரும் ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கும் அது என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

• அழகிய பெண்ணை கனவில் காண்டால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை குறிக்கிறது.

• மங்கள பொருளுடன் கன்னிப்பெண் வீட்டிற்குள் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறார்கள் அல்லது திருமண முயற்சி கைக்கூடும்.

• அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

• அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது போல் கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

• அணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

• ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு ஏற்படும்.

• அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்.

• அட்டைப் பூச்சியை கனவில் கண்டால் சத்ருக்களால் பிரச்னைகள் உருவாகும். 

• அரிசி நிறைந்த கூடையை கனவில் காணுதல் நன்மை உண்டாகும்.

• அணிகலன்கள் வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் பயக்கும்.

• அத்தி மரத்தை காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதை குறிக்கும்.

• ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் நமக்கு கூடிய விரைவில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.

• ஆலயத்தில் நாம் தனியாக இருந்து கதவு மூடப்பட்டது போல் கனவு காண்பது தொழிலில் தேக்க நிலைகள் ஏற்படும்.

• ஆலயத்தின் தலை வாசலை நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் என்பதை குறிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT