ஆன்மிகம்

நாளை பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

தினமணி

திருவண்ணாமலையில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, மாதந்தோறும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், ஆனி மாதப் பௌர்ணமியை அடுத்து, சனிக்கிழமை (ஜூலை 8) காலை 8.44 மணிக்கு தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) காலை 10.26 மணிக்கு முடிவடைகிறது. எனவே, இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT