முகப்பு
ஆன்மிகம்

இந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை: முருக பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைப்பு

இந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை வருவதால் முருக பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

இந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை வருவதால் முருக பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

ஆடி 03-(19.07.17) மற்றும் ஆடி 30-(15.08.17) என இரண்டு நாட்கள் கிருத்திகை வருகின்றது. இதனால், முருகனுக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அனைத்து முருகர் கோயில்களில் மாதாந்திர கிருத்திகை உற்சவம் நடைபெறும். ஆனால் ஆடி மாதம் வரும் கிருத்திகையை உற்சவமாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

சுப்ரமணிய சுவாமிக்குப் பால், புஷ்பம், பன்னீர், மயில் காவடி எனப் பலவிதமான காவடிகளைச் சுமந்து வந்து சுவாமியை வழிபட்டு வருகின்றனர். ஆடிக் கிருத்திகை மட்டுமன்றி அந்த மாதம் முழுவதும் பக்தர்கள் காவடி எடுத்துவந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப்பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த ஆறுபடை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடிக் கிருத்திகை விழாவும் ஒன்று.

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் என்பதால், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அறுபடை வீடுகளிலும் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.