1,108 இளநீர் அபிஷேகத்தில் குளிர்ந்த தண்டு முத்து மாரியம்மன்
காஞ்சிபுரத்தில் உள்ள தண்டு முத்து மாரியம்மன் கோயிலில் 1,108 இளநீரைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரத்தில் உள்ள தண்டு முத்து மாரியம்மன் கோயிலில் 1,108 இளநீரைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள தண்டு முத்து மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் இளநீர் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், கத்திரி வெயில் முடிந்துள்ள நிலையில், வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சியடைய வேண்டி அம்மனுக்கு 1,108 இளநீரைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அபிஷேகத்தை கண்ணாற கண்டு மகிழ்ந்தனர்.
Advertisement
Advertisement