பதற்றம் இல்லாமல் தைரியமாக முடிவுகளை பார்ப்போம்: 10-ம் மாணவர்களுக்கு அன்பில் அறிவுரை!
பதற்றம் இல்லாமல் தைரியமாக முடிவுகளை பார்ப்போம் என மாணவர்களுக்கு அன்பில் மகேஸ் அறிவுரை குறித்து...
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாக உள்ள நிலையில், பதற்றம் இல்லாமல் தைரியமாக முடிவுகளை பார்ப்போம். வாழ்த்துகள் என முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளாா்.
இதையடுத்து மாணவா்கள் தோ்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண், பிறந்ததேதி ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.
Advertisement
Advertisement
இவைதவிர, தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவா்களுக்கு அவா்கள் பயின்ற பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வழியாக தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இந்த நிலையில், பதற்றம் இல்லாமல் தைரியமாக முடிவுகளை பார்ப்போம். வாழ்த்துகள் என முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கியுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இது உங்களுக்கான முடிவு மட்டுமல்ல!
ஆசிரியப் பெருமக்களின் கற்பித்தல் செயல்பாடு எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது?
தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
என எல்லாவற்றையும் மதிப்பிடுவதற்கான முடிவுதான் இது.
ஆகவே பதற்றம் இல்லாமல் தைரியமாக முடிவுகளை பார்ப்போம். வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.
Regarding Anbil Mahesh's advice to students: Let us face the results courageously and without anxiety
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.