ஆன்மிகம்

தஞ்சை பெரிய கோயிலில் ஜூன் 23-ம் தேதி முதல் ஆஷாட நவராத்திரி தொடக்கம்

தினமணி

தஞ்சை பெரிய கோயிலில் 15-ம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா ஜூன் 23-ம் தேதி விமரிசையாகத் தொடங்க உள்ளது.

பிரசித்தி பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி திருவிழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டு வருகிற 23-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

இதில், வராகி அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது. முதல் நாள் காலையில் கணபதி ஹோடமத்துடன் விழா தொடங்குகிறது. அதன் பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று, பல்வேறு இனிப்புகளைக் கொண்டு அன்றைய தினம் அலங்காரம் செய்யப்படுகிறது. இவ்வாறு 9 நாளும் அம்மனுக்கு வெவ்வேறு அலங்காரம் செய்யப்படுவது சிறப்பு. மேலும் மாலை நேரங்களில் இன்னிசை கச்சேரி நிகழ்த்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT