ஆன்மிகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ரகசியமாக அஷ்டபந்தனம் சாத்தப்பட்டது ஏன்? 

எஸ். சரவண பெருமாள்

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று மதியம் ரகசியமாக அஷ்டபந்தனம் சாத்தி முடிக்கப்பட்டது. 

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலின் மகா கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக மூலவர் அருணாசலேஸ்வரரின் பிரம்ம பாகத்தில் சாத்தப்பட்ட அஷ்டபந்தன மருந்து கும்பாபிஷேகம் நடந்த ஓரிரு மாதங்களிலேயே பெயர்ந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து அறநிலைத்துறை ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் இன்று அஷ்டபந்தனத்தை முழுவதுமாக பெயர்த்தெடுத்து இன்று மீண்டும் புதிதாக அஷ்டபந்தனம் சாத்தப்பட்டது. 

மாநில தலைமை ஸ்தபதி முத்தையா, வேலூர் இந்துசமய அறநிலையத் துறை ஆணையரும், நகை சரிபார்ப்பு அலுவலருமான விஜயன், கோயில் அறநிலையத்துறை நகை மதிப்பீட்டு அலுவலர் எஸ். குமார் ஆகியோர் அண்ணாமலையார் பிரம்ம பாகத்தில் பெயர்ந்திருந்த அஷ்டபந்தன மருந்தை தேர்ந்தெடுத்து அதில் இருந்த நகைகளை சரிபார்த்தனர். 

பின்னர், சில பரிகார பூஜைகளுக்கு பிறகு புதிதாக அஷ்டபந்தனம் சாத்தினர். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பரவிய தகவலை அவர்கள் மறுத்தனர். ஆனால், ஏற்கனவே கும்பாபிஷேகம் 

நடந்தபோது எத்தனை எண்ணிக்கையிலான தங்கம், வைரம், பவளம் போன்றவை அஷ்டபந்தனத்துடன் சேர்த்து வைக்கப்பட்டது என்ற தகவலையும், இப்போது சரிபார்க்கப்பட்ட போது அதே எண்ணிக்கையிலான நகைகள் இருந்ததா? என்பதையும் அவர்கள் விளக்க மறுத்துவிட்டனர். 

எனவே, அஷ்டபந்தன மருந்தை பெயர்த்தெடுத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வந்த தகவல்கள் குறித்து முழுமையான விளக்கம் கிடைக்காமலேயே உள்ளது. இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துடன் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அஷ்டபந்தனம் சாத்தப்பட்டது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து உண்மை வெளிப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT