ஆன்மிகம்

2017-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது?

2017-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி (வாக்கிய பஞ்சாங்கம் படி) எப்போது நிகழ உள்ளது? சனி பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி

2017-ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி (வாக்கிய பஞ்சாங்கம் படி) எப்போது நிகழ உள்ளது? சனி பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

நிகழும் மங்களகரமான கலியுகாதி 5118 - சாலிவாகன சகாப்தம் 1939 - பசலி 1427 - கொல்லம் 1193-ம் ஆண்டு ஸ்வஸ்தி்ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 4-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 19.12..2017 சுக்ல ப்ரதமையும் செவ்வாய்க்கிழமையும் மூலா நக்ஷத்ரமும் வ்ருத்தி நாமயோகமும் பவ கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.45க்கு - காலை 9.59க்கு சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார்.

தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.

தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் மகர ராசிக்கு விகாரி வருடம் பங்குனி மாதம் 15ம் தேதி - 28.03.2020 - சனிக்கிழமையன்று உதயாதி நாழிகை 22.54க்கு மாறுகிறார். 

தனுசு ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் கும்ப ராசியையும் - ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும் - பத்தாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார்.

சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT