ஆன்மிகம்

கோயில்களில் கற்பூர தீபாராதனை காட்டுவது ஏன்?

கோயில்கள் எதற்காகத் தெய்வங்களுக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம். 

தினமணி

கோயில்கள் எதற்காகத் தெய்வங்களுக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம். 

கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் கடவுளுக்கு காண்பிக்கின்றனர். கற்பூரம் கடைசிவரை எரிந்து போகும். எதுவுமே மிஞ்சாது. மனிதன் இறந்தபிறகும் இதே நிலைமைதான். எஞ்சும் சாம்பல் கூடத் தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்தத் தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டுகிறார்கள். எனவே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது.

மேலும் கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது. இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும். அதைப் பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு. கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்தத் தீபாராதனை செய்யப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிஸ்பண்ணிடாதீங்க... எய்ம்ஸ்-இல் 3,500 நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

வெளியுறவு கொள்கையின் பேரழிவு! கார்கே

திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

நாளை (ஆக. 8) மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!

SCROLL FOR NEXT