ஆன்மிகம்

அசோக்நகர் சபரிமலை யாத்திரைக்குழுவின் வெள்ளிவிழா கொண்டாட்டங்கள்

தினமணி

அசோக் நகர் சபரிமலை யாத்திரைக் குழுவின் 25-ம் ஆண்டு வெள்ளிவிழா ஸ்ரீஜயப்ப பூஜை, லட்சார்ச்சனை வைபவத்துடன் டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் மேற்கு மாம்பலத்தில் கிரி தெருவில் உள்ள சோமசுந்தர நாடார் திருமண மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது. 

டிசம்பர் 29-ம் தேதி கணபதி ஹோமம், கோ பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அஸ்வமேத பூஜை நடைபெற்றது. காலை நிகழ்ச்சியாக மயிலாடுதுறை ஞானகுரு பாகவாத குழுவினரின் நாமசங்கீர்த்தனம் அபிநயத்துடனும், மாலை நிகழ்ச்சிகளாக திருப்புகழ் இசை விழா விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ஐயப்ப பஜனை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 

டிசம்பர் 30-ம் தேதியன்று காலை வேதபண்டிதர்களின் வேதபாராயணமும், மாலை நாதஸ்வர இன்னிசையுடன் கைலாய வாத்திய முழக்கத்துடன் பார்வதி சமேத கைலாய நாதரும், கோலட்டங்களுடன் ஸ்ரீலட்சுமி நாராயணரும், காவடிகளோடு  வள்ளி தேவசேனா சமேத ஸ்கந்தப் பெருமாளும், காவடிகளோடு வள்ளி தேவசேனா சமேத ஸ்கந்தப் பெருமானும், கதகளி கோஷங்களுடன் ஸ்ரீ ஐயப்பன், காஞ்சி மகாசுவாமிகள் உற்சவ மூர்த்திகளின் திருவீதிஉலா நடைபெற்றது. நிறைவாக ஸ்ரீவாஞ்சியம் குரு கிருபா மண்டலியினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. 

டிசம்பர் 31-ம் தேதி ஸ்ரீ ஐயப்ப லட்சார்ச்சனையும், திருமதி உஷாசுவாமிநாதன் தலைமையில் ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி மண்டலியின் ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணமும், ஸ்ரீசாயி பஜன் மண்டலியின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சியும், பகவான் ஸ்ரீ ஐயப்பனுக்கு படிப்பாட்டு பாடும் நிகழ்ச்சியும் மோகன் தலைமையில் ஐயப்ப பஜனையுடன் புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றதுக. 

மேலும் தொடர்பிற்கு - 9500040497 / 9962320558

தகவல் - எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT